For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியாவை திணறடிக்கும் காட்டுத்தீ... அதிர்ச்சி தெரிவித்த டேவிட் வார்னர்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ள காட்டுத்தீக்கு பலர் உயிரிழந்துள்ள நிலையில், காட்டுத்தீ குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்த நெருக்கடியான சூழலில் தீயை அணைக்க பாடுபட்டு வரும் தீயணைப்பு வீரர்கள், சமூக ஆர்வலர்களுக்கு அவர் மரியாதை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உணர்ச்சிப்பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.

காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட மக்களுடன் தாங்கள் கைகோர்த்துள்ளதாக தெரிவித்துள்ள வார்னர், காட்டுத்தீயை அணைக்க பாடுபட்டுவரும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உண்மையான ஹீரோக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

80 வயது ரசிகருக்கு பரிசு - ஆஸ்திரேலிய கோச்சுக்கு குவியும் பாராட்டு80 வயது ரசிகருக்கு பரிசு - ஆஸ்திரேலிய கோச்சுக்கு குவியும் பாராட்டு

நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கிப்ஸ்லேண்ட், நியூசவுத் வேல்ஸ், சிட்னி மற்றும் விக்டோரியா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் காட்டுத்தீ தொடர்ந்து பரவிவருகிறது. இதற்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி தெரிவித்த டேவிட் வார்னர்

அதிர்ச்சி தெரிவித்த டேவிட் வார்னர்

இந்த காட்டுத்தீயையொட்டி ஒருவர் நாய் ஒன்றுடன் கடற்கரையையும் காட்டுத்தீயையும் பார்த்தபடி உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த டேவிட் வார்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையை அனுபவிக்கும் உரிமை

வாழ்க்கையை அனுபவிக்கும் உரிமை

ஆஸ்திரேலியாவுடன் நியூசிலாந்து அணி மோதும் 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை நடைபெறவுள்ள நிலையில் தாங்கள் எவ்வளவு சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம் என்றும் தீயணைப்பு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் தீயை அணைக்க எவ்வளவு போராடி வருகிறார்கள் என்றும் அவர் தனது பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவங்க சொல்லிட்டு போயிட்டாங்க.. இப்ப திட்டு வாங்குறது நாங்க தானே.. நொந்து நூடுல்ஸ் ஆன இளம் வீரர்கள்!

உண்மையான ஹீரோக்கள்

இந்த காட்டுத்தீயை அணைக்க போராடிவரும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் தான் மற்றும் தன்னுடைய குடும்பத்தினர் இருப்போம் என்றும், களத்திலிருந்து போராடும் இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

இதனிடையே காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள கடுமையான புகைமூட்டம் காரணமாக சிட்னியில் நாளை நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா -நியூசிலாந்து இடையிலான போட்டி தடைபட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் செயல் தலைவர் பீட்டர் ரோச் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, January 2, 2020, 18:36 [IST]
Other articles published on Jan 2, 2020
English summary
David Warner expresses concern on Australia Bushfire
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X