For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

99 ரன்னில் அவுட் ஆன டேவிட் வார்னர் 100 அடித்தது எப்படி.. ஆஷஸ் போட்டியில் நடந்த அதிசயம்!

ஆஷஸ் போட்டியில் டேவிட் வார்னர் 99 ரன்னில் இருந்த போது கேட்ச் கொடுத்து அவுட் ஆகி இருக்கிறார்.

By Shyamsundar

மெல்போர்ன்: ஆஷஸ் போட்டியில் டேவிட் வார்னர் 99 ரன்னில் இருந்த போது கேட்ச் கொடுத்து அவுட் ஆகி இருக்கிறார். இதனால் இவர் 1 ரன் வித்தியாசத்தில் 100 ரன் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

இவர் பெவிலியன் நோக்கி செல்லும் போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் சோகமாக குரல் எழுப்பினார்கள். எப்போதும் நடப்பது போலவே இந்த ஆஷஸ் போட்டியிலும் அதிசயம் நிகழ்ந்து இருக்கிறது.

அவுட் ஆகி மைதானத்தை விட்டு வெளியே செல்ல இருந்த வார்னர் மீண்டும் அழைக்கப்பட்டார். அதுமட்டும் இல்லாமல் அவர் அதிரடியாக தனது தவறவிட்ட சதத்தை அடித்தார்.

4 வது ஆஷஸ் போட்டி

4 வது ஆஷஸ் போட்டி

ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் தற்போது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. சூதாட்டம் தொடங்கி வீரர்களின் சண்டை வரை இந்த வருடமும் ஆஷஸ் தொடர் ஆரம்பத்திலேயே வைரல் ஆகி உள்ளது. ஒவ்வொரு நாள் போட்டியிலும் ஒவ்வொரு விதமான களேபரங்கள் நடந்து வருகிறது.

அவுட் ஆனார்

அவுட் ஆனார்

இந்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்னில் நடந்தது. இதில் அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 99 ரன்கள் எடுத்தார். ஆனால் இங்கிலாந்து பவுலர் டாம் குரான் வீசிய பந்தில் அப்போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் அவர் தனது 24 வது சதத்தை அடிக்க முடியாமல் போனது.

மீண்டும் வந்தார்

மீண்டும் வந்தார்

இவர் அவுட் ஆன காரணத்தால் பெவிலியன் நோக்கி சென்றார். பாதி தூரம் சென்ற போது அம்பயரால் மீண்டும் அழைக்கப்பட்டார். டாம் வீசிய பந்து நோ-பால் என்றும் அம்பயர் அறிவித்தார். காலை டாம் கிரீஸுக்கு வெளியே வைத்து இருக்கிறார். இதனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினார்கள்.

சதம்

சதம்

பின் மீண்டும் களத்திற்கு வந்த வார்னர் அதிரடியாக ஆடினார். சிங்கிள் அடித்த அவர் தனது 21 வது சதத்தை வெற்றிகரமாக எட்டி பிடித்தார். ஆனால் அவர் மீண்டும் 103 ரன் இருக்கும் போது அவுட் ஆனார். ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

Story first published: Tuesday, December 26, 2017, 12:43 [IST]
Other articles published on Dec 26, 2017
English summary
David Warner got 21st test century in the Ashes series. He was actually dismissed on 99 runs. The Umpire gives no ball to the, so David Warner called back to the ground and he knocked his 21st century.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X