For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னரா? ஸ்மித்தா? பந்து சேத விவகாரத்தின் மூளை யார்? உண்மையை உடைத்த சக வீரர் பான்கிராப்ட்

மெல்போர்ன் : பந்து சேத விவகாரத்தில் சிக்கி தடை செய்யப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட்டின் தடை இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர உள்ளது.

இந்த நிலையில், பந்து சேத விவகாரத்தில் என்ன நடந்தது என்ற விவரங்களை தெரிவித்து பரபரப்பாக்கி இருக்கிறார் பான்கிராப்ட்.

பந்து சேத விவகாரம்

பந்து சேத விவகாரம்

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய - தென்னாபிரிக்க வீரர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வார்னரை எல்லை மீறி கலாய்த்தனர் தென்னாபிரிக்க ரசிகர்கள். இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் உப்புத் தாள் வைத்து பந்தை தேய்க்கும் காட்சி நேரலையில் பதிவானது.

தடை பெற்றனர்

தடை பெற்றனர்

அதன் பின்னர் பந்தை திட்டமிட்டு சேதப்படுத்தியதாக பான்கிராப்ட், வார்னர் மற்றும் ஸ்மித் தடை செய்யப்பட்டனர். பான்கிராட் ஒன்பது மாத தடை முடிந்து இன்னும் சில தினங்களில் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆட உள்ளார். ஓராண்டு தடையில் இருக்கும் வார்னர் மற்றும் ஸ்மித் மார்ச் மாதம் முதல் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் ஆட தயாராகி வருகின்றனர்.

வார்னர் தான் மூளை

வார்னர் தான் மூளை

இந்நிலையில் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்த தூண்டியது யார் என்ற விஷயத்தை வெளிப்படையாக பேசினார். "வார்னர் அன்று போட்டியில் நாங்கள் இருந்த சூழ்நிலையை வைத்து என்னிடம் பந்தை சேதப்படுத்துமாறு கூறினார்" என கூறினார் பான்கிராப்ட்.

மரியாதை கிடைக்கும்

மரியாதை கிடைக்கும்

எனினும், பான்கிராப்ட் தான் இதை செய்யாமல் இருந்திருக்க முடியும். எனினும், அணியில் மரியாதை கிடைக்கும் என நினைத்து இப்படி செய்ததாக கூறினார். தடைக்குப் பின் தான் கிரிக்கெட் மீது மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார் பான்கிராப்ட்.

Story first published: Wednesday, December 26, 2018, 18:10 [IST]
Other articles published on Dec 26, 2018
English summary
David Warner is the mastermind behind ball tampering says Cameron Bancroft
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X