For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்க புள்ளீங்கோ எல்லாம் பயங்கரம்... சிறப்பான பந்துவீச்சு குறித்து வார்னர் பெருமிதம்

அபுதாபி : அபுதாபியின் சையக் சையத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல்லின் 11வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இந்த போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் அந்த அணி பெற்றுள்ள முதல் வெற்றி இது.

இந்நிலையில் அணியின் பௌலர்கள் சிறப்பாக பந்து வீசியதாக கேப்டன் டேவிட் வானர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் உற்சாகத் தீ

ரசிகர்களின் உற்சாகத் தீ

ஐபிஎல் தொடர் கடந்த 19ம் தேதி துவங்கி நடைபெற்றுவரும் நிலையில், வெற்றி முனைப்போடு அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன. தினந்தோறும் நடைபெறும் போட்டிகள் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவங்களை தந்துக் கொண்டிருக்கின்றன. அவர்களின் உற்சாகத் தீயால் வீரர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்நிலையில் ஐபிஎல்லின் நேற்றைய 11வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் 15 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் அந்த அணி பெற்றுள்ள முதல் வெற்றி இது. இதேபோல டெல்லி கேபிடல்ஸ் பெற்றுள்ள முதல் தோல்வி இது.

கேப்டன் பெருமிதம்

கேப்டன் பெருமிதம்

இந்நிலையில் டெத் பௌலிங்கில் அணி வீரர்கள் சிறப்பாக செயல்புரிந்ததாகவும் ரஷீத் கான் மற்றும் புவனேஸ்வர் குமார் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதாகவும் கேப்டன் டேவிட் வார்னர் குறிப்பிட்டுள்ளார். போட்டியில் 4 ஓவர்களில் 14 ரன்களை கொடுத்து ரஷீத் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதேபோல புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பேட்ஸ்மேன்கள் சிறப்பு

பேட்ஸ்மேன்கள் சிறப்பு

பௌலர் மிட்ச் மார்ஷ் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகிய நிலையில் இளம் பந்துவீச்சாளர் அபிஷேக் சிறப்பாக பந்துவீசியதாகவும் வார்னர் பாராட்டு தெரிவித்தார். மேலும் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி நல்ல இலக்கை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். நேற்றைய வெற்றி மூலம் தனது வெற்றிக் கணக்கை துவக்கியுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத், அடுத்ததாக வரும் 2ம் தேதி சிஎஸ்கேவுடன் மோதவுள்ளது.

Story first published: Wednesday, September 30, 2020, 11:58 [IST]
Other articles published on Sep 30, 2020
English summary
SRH face Chennai Super Kings (CSK) in their next match on October 2
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X