For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டக்டக்னு விளையாடுறோம்.. தட்றோம்.. கப்பைத் தூக்கறோம்.. டேவிட் வார்னர் தடாலடி!

சிட்னி : ஐபிஎல்லின் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்றிருந்ததால் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

தற்போது மீண்டும் சன் ரைசர்ஸ் ஐதராபாத்தின் கேப்டனாக இந்த 2020 சீசனில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அவர் அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும் இந்த முறை சன் ரைசர்ஸ் அணிக்காக கோப்பையை கைப்பற்ற தீவிரத்துடன் விளையாடுவேன் என்றும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். சன் ரைசர்ஸ் அணி அடுத்த ஏப்ரல் 1ம் தேதி மும்பை இந்தியன்சுடன் ஐபிஎல்லில் தனது முதல் போட்டியை எதிர்கொள்கிறது.

தடை பெற்ற டேவிட் வார்னர்

தடை பெற்ற டேவிட் வார்னர்

ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். மேலும் அவர் கடந்த 2018 ஐபிஎல்லிலும் பங்கேற்கவில்லை.

4வது இடத்தில் டேவிட் வார்னர்

4வது இடத்தில் டேவிட் வார்னர்

ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 4 சீசன்களில் பங்கேற்று முறையே, 562, 848, 642 மற்றும் 692 என ரன்களை குவித்துள்ள டேவிட் வார்னர், இதுவரை 126 போட்டிகளில் பங்கேற்று 4,706 ரன்களை குவித்து ஐபிஎல்லின் அதிக ரன்களை குவித்த வீரராக 4வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் இந்தியாவின் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் உள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவிப்பு

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவிப்பு

இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ஐபிஎல் 2020 தொடருக்கான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை டேவிட் வார்னர் வழிநடத்துவார் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் வரும் ஏப்ரல் 1ம் தேதி தனது முதல் போட்டியை எதிர்கொள்கிறது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் பகிர்வு

சன்ரைசர்ஸ் ஐதராபாத் பகிர்வு

இதனிடையே, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இந்த அறிவிப்பிற்கு டேவிட் வார்னர் வீடியோ ஒன்றின் மூலம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் தன்னை மீண்டும் கேப்டனாக நியமித்துள்ளதற்கு டேவிட் வார்னர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

கோப்பையை கைப்பற்றுவேன்

இதனிடையே, தான் இல்லாத சீசன்களில் அணியை வழிநடத்திய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் இந்திய வீரர் புவனேஸ்வர் குமாருக்கு டேவிட் வார்னர் தனது வீடியோவில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். தன்னை மீண்டும் கேப்டனாக நியமித்துள்ள நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துள்ள டேவிட் வார்னர், இந்த முறை கோப்பையை கைப்பற்றுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Thursday, February 27, 2020, 15:03 [IST]
Other articles published on Feb 27, 2020
English summary
I'll try My Very, Very best to Lifting IPL Trophy - David Warner
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X