For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னருக்கு மீண்டும் "அவமானம்".. கையை விரித்த SRH.. போட்டியில் முக்கிய "திருப்பம்" - என்னாச்சு?

துபாய்: ஐபிஎல் 2021 தொடரில், மீண்டும் ஒருமுறை டேவிட் வார்னர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 10 வருடங்களில் ஆஸ்திரேலிய அணியின் மிகவும் அபாயகரமான வீரரான திகழ்ந்தவர் டேவிட் வார்னர்.

'சூப்பர் சண்டே’.. ரசிகர்களுக்கு இன்று செம விருந்து.. புள்ளிப்பட்டியலை மாற்றும் 3 'தலை’களின் ஆட்டம்!'சூப்பர் சண்டே’.. ரசிகர்களுக்கு இன்று செம விருந்து.. புள்ளிப்பட்டியலை மாற்றும் 3 'தலை’களின் ஆட்டம்!

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில், உலகின் சிறந்த டாப் 5 பேட்ஸ்மேன்களில் நிச்சயம் வார்னருக்கும் இடமுண்டு.

சொதப்பும் வார்னர்

சொதப்பும் வார்னர்

ஆனால், கடந்த இரு ஐபிஎல் சீசன்களில் வார்னரால் துளி தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியவில்லை. அவரது கேப்டன்ஷிப்பில் சன் ரைசர்ஸ் மிகவும் மோசமாக விளையாட, தொடரின் பாதியில் இருந்தே அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது சூரியன் நிர்வாகம். ஒரு பிளேயராகவும் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் கேன் வில்லியம்சன் கேப்டனாக்கபட்டார். அவரது கேப்டன்ஷிப்பிலும் சன் ரைசர்ஸ் தத்தளித்து வருவது வேறு கதை. இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் நடந்து வரும் நிலையில், மீண்டும் வார்னருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், முதல் ஓவரை கூட தாண்டமாட்டேன் என்று சத்தியம் செய்து விளையாடி வருகிறார் டேவிட் வார்னர்.

விரைவில் அவுட்

விரைவில் அவுட்

கடந்த சனிக்கிழமையன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 126 ரன்கள் தான் டார்கெட் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதைக் கூட அடிக்க முடியாமல் சன்ரைசர்ஸ் படு மட்டமாக தோற்றது. அதில் கூட வார்னர் அடிக்கவில்லை. ஹைதராபாத் அணியில், முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் அவுட்டாகி வெளியேறினார். ஷமி ஓவரில் 2 ரன்கள் மட்டும் எடுத்து எட்ஜ் ஆகி வெளியேறினார். கொஞ்சம் கூட கிரிக்கெட் விளையாட விருப்பம் இல்லாதவரைப் போல இருந்தது அவரது பேட்டிங்.

கடும் அதிருப்தி

கடும் அதிருப்தி

அப்போதே வார்னர் மீது கடும் அதிருப்தியில் இருந்த சன்ரைசர்ஸ் நிர்வாகம், வார்னருக்கு பதில் ஜேஸன் ராயை களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அந்த தகவலை உறுதி செய்வது போல், ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில், வார்னர் அணியில் நீக்கப்பட, ஜேஸன் ராய் களமிறக்கப்பட்டுள்ளார். வார்னரின் இந்த மோசமான பேட்டிங் சன் ரைசர்ஸ் அணிக்கு பாதிப்பு என்பது முக்கியமல்ல. உண்மையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தான் இப்போது கவலையில் இருக்கிறது.

ஆஸி, நிர்வாகம் கவலை

ஆஸி, நிர்வாகம் கவலை

ஏனெனில், இதே அமீரகத்தில் தான் இன்னும் 20 நாளில் டி20 உலகக் கோப்பை தொடங்கவிருக்கிறது. இதில், ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனராக களமிறங்கப் போகிறவர் டேவிட் வார்னர் தான். ஆனால், அவரது இந்த மோசமான ஃபார்ம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வார்னர் நிலைமையாவது பரவாயில்லை.. ஆஸ்திரேலியாவின் மற்றொரு டாப் பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் இப்போது எந்த அணியில் இருக்கிறார் என்பது கூட பல ரசிகர்களுக்கு தெரியாது என்பதே உண்மை. டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஸ்மித்துக்கு இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. வார்னராவது போட்டிகளில் விளையாடியதால், ஃபார்மில் இல்லை என்பது தெரிய வந்தது. ஆனால், வாய்ப்பே கிடைக்காமல் வெளியே உட்கார்ந்திருக்கும் ஸ்மித், ஃபார்மில் இருக்கிறாரா, இல்லையா என்ற முடிவுக்கு கூட வரமுடியவில்லை.

Story first published: Monday, September 27, 2021, 20:25 [IST]
Other articles published on Sep 27, 2021
English summary
warner removed from srh team once again ipl 2021 - வார்னர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X