For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விரைவில் டி20 போட்டிகளில் இருந்து விலக முடிவெடுத்த டேவிட் வார்னர்

Recommended Video

கோலி டின்னருக்கு அழைப்பார்... காத்திருக்கும் வார்னர் | Warner waits for Dinner Invite from kohli

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விரைவில் டி20 தொடர்களில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கிரிக்கெட்டின் 3 வித வடிவங்களிலும் விளையாடுவது குறிப்பாக டி20 வடிவத்தின் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்பது மிகவும் சிரமமாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதனால் மூன்று சிறிய குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவழிக்க இயலாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டேவிட் வார்னர் இதுவரை 76 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2079 ரன்களை குவித்துள்ளார். மேலும் ஒரு சதம், 15 அரைசதங்களையும் அவர் அடித்துள்ளார்.

அவர் கை விட்டாலும் நான் விடமாட்டேன்.. சாதனை சதம்.. மீண்டும் தெறிக்கவிட்ட இந்திய வீரர்!அவர் கை விட்டாலும் நான் விடமாட்டேன்.. சாதனை சதம்.. மீண்டும் தெறிக்கவிட்ட இந்திய வீரர்!

ஆஸியின் சிறப்பான வீரர்

ஆஸியின் சிறப்பான வீரர்

ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரராக விளங்கும் டேவிட் வார்னர், அந்த அணியின் சிறப்பான பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த வார்னர், மீண்டும் அணிக்காக களமிறங்கி டெஸ்ட் போட்டியில் முச்சதத்தை அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

ஆலன் பார்டர் விருது பெற்ற வார்னர்

ஆலன் பார்டர் விருது பெற்ற வார்னர்

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் டேவிட் வார்னருக்கு ஆலன் பார்டர் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தான் ஆடும் போட்டிகளின் மூலம் பல்வேறு சாதனைகளை புரிந்துவரும் டேவிட் வார்னருக்கு சிறப்பு செய்யும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

டி20 போட்டிகளில் விலக முடிவு

டி20 போட்டிகளில் விலக முடிவு

இந்நிலையில் தொடர்ந்து 3 வடிங்களிலும் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவது சிரமமாக உள்ளதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். போட்டிகளின் அட்டவணையை தான் பார்த்ததாகவும், போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்தடுத்த நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டியுள்ளது மிகவும் கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.

டேவிட் வார்னர் ஆதங்கம்

டேவிட் வார்னர் ஆதங்கம்

தனக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் அவர்களையும் மனைவியையும் கவனிக்க முடியாமல் அடுத்தடுத்து பயணம் மேற்கொள்வது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். டி20 போட்டிகளில் அடுத்தடுத்து உலக கோப்பைகள் வரவுள்ள நிலையில், அதையடுத்து டி20போட்டிகளிலிருந்து ஓய்வெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டும் இந்தியாவில் அடுத்த ஆண்டும் டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்படவுள்ளது.

டி20 போட்டிகளில் விலகிய வீரர்கள்

டி20 போட்டிகளில் விலகிய வீரர்கள்

டி20 போட்டிகளை விளையாடுவது மிகவும் சவாலானது என்று தெரிவித்துள்ள டேவிட் வார்னர், இந்த போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்பும் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த போட்டிகளின் சவாலை கருத்தில்கொண்டுதான் ஏபி டீ வில்லியர்ஸ் மற்றும் வீரேந்திர சேவாக் போன்றவர்கள் அதிலிருந்து விலகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Story first published: Tuesday, February 11, 2020, 17:32 [IST]
Other articles published on Feb 11, 2020
English summary
David Warner said that constant travelling becomes difficult
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X