பாப்பாவுக்கு பல்லு விழுந்துருச்சு.. நீங்களும் மொட்டை அடிங்களேன்.. வீடியோ போட்ட வார்னர்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வீடியோ வீடியோவாக போட்டுத் தள்ளுகிறார். இப்போது புதிதாக ஒரு வீடியோ போட்டுள்ள அவர், வாங்கய்யா, என்னை மாதிரி மொட்டை போடுங்க பார்ப்போம் என்று விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்துக்கு சவால் விட்டுள்ளார்.

போட்டி நடந்தால் மட்டுமே வீரர்களுக்கு சம்பளம்

வார்னரும் எல்லா வீரர்களைப் போலவே வீட்டோடு அடைபட்டுக் கிடக்கிறார். இதனால் அவ்வப்போது ஏதாவது வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார். வரிசையாக வீடியோ போட்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தனது மகளுக்கு கை கழுவுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்து அந்த வீடியோவைப் போட்டிருந்தார். சும்மா சொல்லக் கூடாது, குட்டிப் பாப்பா நன்றாகவே அதை செய்து காட்டியிருந்தாள்.

நம்மாளுகளை மட்டும் வச்சு நடத்தி முடிக்கலாம்ல.. ராஜஸ்தான் ராயல்ஸின் ஆசையைப் பாருங்க!

View this post on Instagram

Wohoo an exciting morning, Ivy’s first tooth has just fallen out. #Bullsdaycare #Bullsdentist

A post shared by David Warner (@davidwarner31) on Mar 29, 2020 at 1:43pm PDT

பாப்பாவுக்கு பல்லு விழுந்திருச்சு

அடுத்து தனது மகளை உட்கார வைத்து இவர் மட்டும் டென்னிஸ் பந்தை வைத்து சுவரில் அடித்து அடித்து விளையாடிக் கொண்டிருந்தார் . அந்த வீடியோவும் வைரலானது. அதன் பிறகு அவரது குட்டி மகளுக்கு முதல் பல் விழுந்த போட்டோவை வெளியிட்டு, அய்யா.. இவிக்கு முதல் பல் விழுந்துருச்சு என்று கூறி குதூகலித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மொட்டை வீடியோ போட்டுள்ளார் வார்னர்.

மொட்டை போட்டுக் கொண்ட வார்னர்

இந்த வீடியோவில் தனக்குத் தானே மொட்டை போட்டுக் கொள்கிறார் வார்னர். முழு வீடியோவையும் பாஸ்ட் பார்வர்டில் ஓட விட்டுள்ளார். அதில், கொரோனாவைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை மீட்பதற்காக பலரும் களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எனது தலையை நானே மொட்டை அடித்துக் கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார் வார்னர். நல்ல விஷயம்தான்.

நீங்களும் மொட்டை அடிக்கலாமே

நீங்களும் மொட்டை அடிக்கலாமே

இதேபோல நீங்களும் மொட்டை போடுங்க என்று விராட் கோலிக்கும், ஸ்டீவ் ஸ்மித்துக்கும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அவர்களும் மொட்டை அடிப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் இப்போதுதான் விராட் கோலியை உட்கார வைத்து பார்த்து பார்த்து முடி வெட்டி விட்டார் அவரது பாசக்கார மனைவி அனுஷ்கா.. இந்த நிலையில் விராட் கோலி மொட்டை போடுவாரா என்பது சந்தேகம்தான்.

ஆஸ்திரேலியாவிலும் கொரோனா பாதிப்பு

ஆஸ்திரேலியாவிலும் கொரோனா பாதிப்பு

ஆஸ்திரேலியாவிலும் கொரோனாவைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு இதுவரை 4000க்கும் மேற்பட்டோருக்கு பாசிட்டிவ் ஆகியுள்ளது. மக்களை மீட்கும் பணியில் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பல்துறையினர் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகன்றனர். நம்ம நாட்டைப் போலவே அங்கும் லாக் டவுன்தான். இந்த நிலையில் இப்படி வீடியோ போட்டு பொழுது போக்கி வருகிறார்கள் பலரும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Aussie opener David warner shaved his head and Challenged Virat Kohli and Steve Smith in a Video
Story first published: Wednesday, April 1, 2020, 20:02 [IST]
Other articles published on Apr 1, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more