For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

VIDEO: தல தோனியின் மின்னல் வேக ஸ்டெம்ப்பிங்..! நடுவர் அவுட் கொடுக்கும் முன்பே வெளியேறிய வார்னர்

சென்னை:சென்னை அணிக்கு எதிரான போட்டியில், தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கில் அவுட்டான வார்னர், 3வது நடுவர் அவுட் கொடுக்கும் முன்பே களத்தில் இருந்து வெளியேறினார்.

சென்னையில் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்சஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் முதலில் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

ஹைதராபாத் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் சொந்த காரணத்துக்காக நியூசிலாந்து திரும்பினார். இவருக்கு பதிலாக ஷாகிப் அல் ஹாசன் அணியில் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் எதிர்பார்த்தது போல ஹர்பஜன் சிங் இடம் பிடித்தார்.

வார்னர் அதிரடி, பாண்டே அட்டகாசம்... சொதப்பிய விஜய் சங்கர்..! சென்னைக்கு வெற்றி இலக்கு 176 ரன்கள் வார்னர் அதிரடி, பாண்டே அட்டகாசம்... சொதப்பிய விஜய் சங்கர்..! சென்னைக்கு வெற்றி இலக்கு 176 ரன்கள்

அதிரடி வார்னர்

அதிரடி வார்னர்

இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர் பெயர் ஸ்டோவ் டக் அவுட்டாகி ஏமாற்றிய போதும், வார்னர் அரைசதம் அடித்து கை கொடுத்தார். ஹர்பஜன் சிங் வீசிய 14 வது ஓவரின் மூன்றாவது பந்தை வார்னர் எதிர்கொண்டார்.

மின்னல் வேக தோனி

அந்த பந்தை எப்படியாவது தூக்கி அடிக்கலாம் என்று முயற்சிக்க... தப்பிய பந்து தல தோனியின் கைகளுக்குள் புகுந்துகொண்டது. 0.20 விநாடிகளில் செயல்பட்ட தோனி... மின்னல் வேகத்தில் தோனி ஸ்டெம்ப்பை பதம்பார்த்தார்.

வெளியேறிய வார்னர்

வெளியேறிய வார்னர்

தோனியின் ஜெட் வேக ஸ்டெம்பிங்கை களத்தில் கண்ட வார்னர் தான் அவுட் என்பதை மானசீகமாக ஒத்துக்கொண்டு நடையை கட்டினார். இத்தனைக்கும் 3வது நடுவர் இன்னும் தமது முடிவை அறிவிக்கவில்லை. உண்மையில் நீங்கள் ஜென்டில்மேன் தான் வார்னர்.

வார்னரின் சாதனை அரைசதம்

வார்னரின் சாதனை அரைசதம்

இந்த போட்டியில் அரைசதம் அடித்த வார்னர் ஐபிஎல், அரங்கில் சென்னை அணிக்கு எதிராக 6வது அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில், அரங்கில் சென்னைக்கு எதிராக 6வது அரைசதத்தை பதிவு செய்த 4வது வீரர் என்ற பெருமை பெற்றார் வார்னர்.

வீரர்கள் விவரம்

வீரர்கள் விவரம்

சென்னை அணிக்கு எதிராக ஐபிஎல் அரங்கில் 6 அரைசதம் அடித்த மற்ற வீரர்களின் விவரம்:

ஷிகர் தவான்

விராட் கோலி

ரோகித் சர்மா

டேவிட் வார்னர்

Story first published: Tuesday, April 23, 2019, 23:15 [IST]
Other articles published on Apr 23, 2019
English summary
David warner stumped by ms dhonis magic hands.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X