For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

''பழைய பன்னீர்செல்வமாக திரும்ப வந்துட்டார்னு சொல்லு''.. வார்னர் மனைவி போட்ட செம ட்வீட்.. வைரல்!

துபாய்: டி20 2021 உலககோப்பையை முதன்முறையாக ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. முதன்முறையாக கோப்பையை வெல்லும் நோக்கில் நியூசிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதின

Recommended Video

David Warner பற்றி Coach-கிட்ட பேசிய Aaron Finch நெகிழ்ச்சி சம்பவம் | Oneindia Tamil

 6 ஓவர்களில் வெற்றி.. ராகுலின் அதிவேக அரைசதம்..ஸ்காட்லாந்தை பந்தாடிய இந்தியா..அரையிறுதிக்கு செல்லுமா 6 ஓவர்களில் வெற்றி.. ராகுலின் அதிவேக அரைசதம்..ஸ்காட்லாந்தை பந்தாடிய இந்தியா..அரையிறுதிக்கு செல்லுமா

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்தில் கடுமையாக தடுமாறியது. ஹேசில்வுட் வீசிய பந்தில் விரைவாக நடையை கட்டினார் டேரில் மிட்செல். இதையடுத்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கி அதிரடியாக விளையாடினார்.

கனே வில்லியம்சன் வெறித்தனம்

கனே வில்லியம்சன் வெறித்தனம்

முதல் 10 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே எடுத்த நியூசிலாந்து அணி கடைசி பத்து ஓவர்களில் 116 ரன்கள் குவித்தது. 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 172 ரன்களை எடுத்தது. தனி நபராக விளையாடிய நியூசி கேப்டன் கனே வில்லியம்சன் வெறும் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் விக்கெட்டை விரைவாக இழந்தது.

மார்ஷ் - டேவிட் வார்னர் சரவெடி

மார்ஷ் - டேவிட் வார்னர் சரவெடி

ஆனால் மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் ஜோடி நியூசி. பந்துகளை சிதறடித்து அணியை வெற்றி பாதையை நோக்கி அழைத்து சென்றனர். சிறப்பாக ஆடி வந்த வார்னர் 34 பந்துகளில் அரைசதம் அடித்து போல்ட் பந்தில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் நிலையாக, அதிரடியாக விளையாடிய மார்ஷ் இறுதி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார். 19-வது ஓவரின் 5-வது பந்தில் ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை எட்டியது. மிட்செல் மார்ஷ் 50 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அவமானம்; தோல்வி

அவமானம்; தோல்வி

இந்த தொடரில் 289 ரன்களை குவித்த டேவிட் வார்னர் தொடர் நாயகன் விருது வென்றார். ஐ.பி.எல்.லில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னரும் 8 மேட்ச்களில் விளையாடி 170 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த அணியும் தோற்றதால் அவர் கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அவரை மைதானத்துக்கு அழைத்து வராமல் ஹோட்டலில் தங்க வைத்து அவமானப்படுத்தினார்கள். ஒரு கட்டத்தில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து ஹைதராபாத் விளையாடும் போட்டியை பார்த்தார் வார்னர்.

மனைவி கேண்டீஸ் வார்னர்

மனைவி கேண்டீஸ் வார்னர்

திடீரென கேப்டன் பதவியில் இருந்து ஹைதராபாத் சன் ரைசர்ஸ் நிர்வாகம் தூக்கியதால் வார்னர் மனமுடைந்து போனார். டுவிட்டரிலும் விரக்தியாக போஸ்ட் போட்டார். அந்த நேரத்தில் வார்னருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வந்தன. அப்போது வார்னருடன் தோள் கொடுத்து முழுமையாக நின்றது அவரது மனைவி கேண்டீஸ் வார்னர்தான். அவர் தொடந்து கணவரை ஊக்கப்படுத்தி வந்தார்.

செம ட்வீட்

செம ட்வீட்

இதன் விளையாக வார்னர் தற்போது அனைவருக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளார். இந்த நிலையில் வார்னரின் வெறித்தனமான கம்பேக்குக்கு அவரது மனைவி கேண்டீஸ் வார்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் கூறியுள்ள அவர் '' அவுட் ஆப் பார்மில் இருந்து வெளியே வந்து பழைய ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னருக்கு வாழ்த்துக்கள்'' என்று பதிவிட்டுள்ளார். அதவது தனது கணவர் பழைய பன்னீர் செல்வமாக திரும்ப வந்துவிட்டார் என்பதுபோல் கருத்து கூறியிள்ளார் கேண்டீஸ் வார்னர். அவரது ட்வீட்டுக்கு கீழே பலரும் வார்னருக்கு ஆதரவு தெரிவித்து கருத்து கூறி வருகின்றனர்.

Story first published: Monday, November 15, 2021, 19:19 [IST]
Other articles published on Nov 15, 2021
English summary
David warner wife Candice Warner congratulates Warner on his frantic comeback. Following his tweet, many people have been commenting in support of Warner
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X