வாழ்த்துக்கள் நட்டு.. நீங்க ஒரு லெஜண்ட்.. நடராஜனுக்காக தமிழில் பேசிய வார்னர்.. வைரல் வீடியோ!

சிட்னி: வாழ்த்துக்கள் நட்டு.. நீங்கள் ஒரு லெஜண்ட் என்று தமிழக வீரர் நடராஜனை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பாராட்டி உள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் நெட் பவுலராக அறிமுகம் ஆன நடராஜன் தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி, மூன்று டி 20 போட்டி, ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடி இவர் கவனம் ஈர்த்தார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக இவர் கேப்டன் டேவிட் வார்னர் தலைமையின் கீழ் ஆடி கவனம் ஈர்த்தார். ஐபிஎல் மூலம் அறிமுகம் ஆன இவர் தற்போது தேசிய அணியில் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார்.

முக்கியம்

முக்கியம்

இந்த நிலையில் நடராஜனை புகழ்ந்து வார்னர் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நான் ஒரு முக்கியமான விஷயம் இங்கே சொல்ல விரும்புகிறேன். வாழ்த்துக்கள் நட்டு, வாழ்த்துக்கள் நட்டு.. நீங்கள் ஒரு லெஜண்ட். உண்மையில் நீங்கள் பெரிய லெஜண்ட்.

சிறப்பான வீரர்

சிறப்பான வீரர்

இதை நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். களத்திற்கு உள்ளேயும், களத்திற்கு வெளியேயும் நீங்கள் மிகவும் சிறப்பான வீரர். அதை மீண்டும் நீங்கள் நிரூபித்து உள்ளீர்கள்.

மகிழ்ச்சி

உங்களோடு ஆடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடராஜனை வார்னர் பாராட்டி உள்ளார். முன்னதாக நடராஜனின் வெற்றியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வார்னர் புகழ்ந்து பாராட்டி இருந்தார். நடராஜனுக்கு தொடக்க காலத்தில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கியது சேவாக், வார்னர் ஆகிய இரண்டு பேரும்தான்.

 முக்கிய வழிகாட்டி

முக்கிய வழிகாட்டி

நடராஜனுக்கு இவர்கள் முக்கிய வழிகாட்டியாக இருந்தனர். நடராஜனுக்கு அடையாளம் கொடுத்ததில் வார்னர், சேவாக் இருவரும் முக்கிய பங்கு வகித்தனர். தற்போது நடராஜனின் வெற்றியை தன்னுடைய வெற்றியாக வார்னர் கொண்டாட தொடங்கி உள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
David Warner wishes Natarajan for his debut tour victory against Australia with a video.
Story first published: Friday, January 22, 2021, 14:15 [IST]
Other articles published on Jan 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X