எங்க வயசு என்னன்னு எங்களுக்கு தெரியும்.. வேணும்னா கூகுள்-ல போய் தேடிக்குங்க.. கடுப்பான பிராவோ!!

டெல்லி : சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் வயதானவர்கள் என்ற பேச்சு கடந்த சீசன் முதல் தொடர்ந்து வருகிறது.

இரு ஆண்டு தடைக்குப் பின் மீண்டும் வந்த சென்னை அணி தன் பழைய வீரர்களை அப்படியே ஏலத்தில் எடுத்தது. அதில் பலர் 30+ வயதை சேர்ந்தவர்கள். இந்த வயதான அணி ஐபிஎல் வெல்லுமா? என கேட்கப்பட்ட போது கோப்பை வென்று காட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

பாகிஸ்தான்! உங்க காமெடிக்கு அளவே இல்லையா? பாக்.னில் ஐபிஎல்-க்கு தடை.. அப்புறம் என்னாச்சு?

வயதான வீரர்கள்

வயதான வீரர்கள்

அதன் பின்னும், 2019 ஐபிஎல் தொடரில் அதே கேள்விகளை எதிர்கொண்டு வருகின்றனர் சென்னை அணி வீரர்கள். இந்த ஆண்டு இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி 30+ வயதை கடந்தவர்கள் அதிகம் கொண்ட அணியாகத்தான் களமிறங்கியது. அதில் வெற்றியும் பெற்றது.

கடுப்பான பிராவோ

கடுப்பான பிராவோ

இருந்தும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் வெற்றிக்குப் பின் பிராவோவிடம் வயதைப் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அப்போது கடுப்பான பிராவோ, "எங்கள் வயது பற்றி எங்களுக்குத் தெரியும். அதைப் பற்றி நீங்கள் கூகுளில் போய் தேடிக் கொள்ளலாம். நாங்கள் 60 வயதானவர்கள் அல்ல. எங்களுக்கு 35, 32 வயது தான் ஆகிறது" என்றார்.

நிறைய அனுபவம்

நிறைய அனுபவம்

மேலும், "நாங்கள் இன்னும் இளமையாகவே இருக்கிறோம். எங்கள் உடம்பை பார்த்துக் கொள்கிறோம். எங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது" என கேள்வி கேட்டவருக்கு நச் என பதில் அளித்தார் பிராவோ.

ஸ்மார்ட்டான அணி

ஸ்மார்ட்டான அணி

மேலும், அனுபவம் தான் முக்கியம் என்ற பிராவோ. அது மட்டுமில்லாமல், நாங்கள் உலகின் சிறந்த கேப்டனால் வழி நடத்தப்படுகிறோம் என தோனி குறித்து பேசினார். நாங்கள் வேகமாக இல்லை என்றாலும் "ஸ்மார்ட்டான" அணியாக இருக்க வேண்டும் என தோனி எங்களுக்கு நினைவுப்படுத்தி வருகிறார் என்றார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
DC vs CSK IPL 2019 : Dwayne Bravo says We are not 60 year olds, when asked about CSK players age debate.
Story first published: Wednesday, March 27, 2019, 14:01 [IST]
Other articles published on Mar 27, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X