For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பொழுது போகலையா.. இந்தாங்க இதைப் பாருங்க.. கொண்டு வந்து கொட்டப் போகும் டிடி ஸ்போர்ட்ஸ்!

டெல்லி: டிடி ஸ்போர்ட்ஸ் ஒரு வேலையில் இறங்கியுள்ளது. அதாவது 2000மாவது ஆண்டு முதல் 2005 வரை நடந்த முக்கியமான கிரிக்கெட் போட்டிகளின் ஹைலைட்டுகளைக் காட்டப் போகிறார்கள்.

Recommended Video

பழைய போட்டிகள் எல்லாம் மறுபடியும்... டிடி ஸ்போர்ட்ஸ் செம ஐடியா!

எந்த விளையாட்டும் இல்லாமல் காய்ந்து போய்க் கிடக்கிறார்கள் வீரர்கள். அது மட்டுமல்லாமல் ரசிகர்களும் கூட செம அப்செட்டாக உள்ளனர். எல்லாம் இந்த கொரோனாவைரஸால் வந்த குழப்பம்.

இதனால் பழைய விளையாட்டுக்களை ரீகால் செய்து விளையாட்டு சானல்கள் ஒளிபரப்பி வருகின்றன. அதைப் பார்த்து ஆறுதல் அடையும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஹய்யா ... என் காலு சரியாய்ருச்சு.. ஆனாலும் விளையாட முடியாது.. ஹாலப்பின் மகிழ்ச்சி + சோகம்!ஹய்யா ... என் காலு சரியாய்ருச்சு.. ஆனாலும் விளையாட முடியாது.. ஹாலப்பின் மகிழ்ச்சி + சோகம்!

சூப்பர் ஹைலைட்டுடன் டிடி ஸ்போர்ட்ஸ்

சூப்பர் ஹைலைட்டுடன் டிடி ஸ்போர்ட்ஸ்

இந்த நிலையில் டிடி ஸ்போர்ட்ஸ் சானல் ஒரு வேலையில் இறங்கியுள்ளது. அதாவது 2000மாவது ஆண்டு முதல் 2005 வரை நடந்த முக்கியமான கிரிக்கெட் போட்டிகளை அது ஒளிபரப்பவுள்ளது. அதற்கு ரிலிவ் தி குளோரியஸ் 2000ஸ் என்று பெயரிட்டுள்ளது. போட்டிகள் தொடங்கும் நாளையும், அது ஒளிபரப்பாகும் நேரத்தையும் கூட அது அறிவித்துள்ளது.

இன்று முதல் 14ம் தேதி வரை

இன்று முதல் 14ம் தேதி வரை

அதன்படி ஏப்ரல் 7ம் தேதி அதாவது இன்று முதல் இது தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையிலான 2003ம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு தொடரை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர். முதல் போட்டியான இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி காலை 10 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. அடுத்த போட்டி ஆஸ்திரேலியா -நியூசிலாந்து போட்டி பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

நாளை 3 போட்டிகள்

நாளை 3 போட்டிகள்

3வது போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலானது மாலை 4 மணி முதல் 6 மணி வ ரை ஒளிபரப்பாகும். நாளை அதாவது 8ம் தேதி ஆஸ்திரேலியா -நியூசிலாந்து போட்டி காலை 10 மணிக்கும், இந்தியா -நியூசிலாந்து போட்டி ஹைலைட்ஸ் பிற்பகல் 2 மணிக்கும், ஆஸ்திரேலியா -நியூசிலாந்து போட்டி மாலை 4 மணிக்கும் ஹைலைட்டுகளாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று டிடி ஸ்போர்ட்ஸ் அறிவித்துள்ளது.

9ம் தேதி 3 போட்டிகள்

9ம் தேதி 3 போட்டிகள்

அடுத்து 9ம் தேதி இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான போட்டி காலை 10 மணிக்கும், இந்தியா -நியூசிலாந்து இடையிலான போட்டி பிற்பகல் 2 மணிக்கும், இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டி 4 மணிக்கும் ஒளிபரப்பாகும். இவை அனைத்துமே ஹைலைட்டுகளாகதான் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.

2 தென்னாப்பிரிக்க போட்டிகள்

2 தென்னாப்பிரிக்க போட்டிகள்

அடுத்து தென்னாப்பிரிக்க அணி 2000மாவது ஆண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிய தொடரும் ஒளிபரப்பாகிறது. அதன்படி 10ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை முதல் ஒரு நாள் போட்டியின் ஹைலைட்ஸ் காட்டப்படும். அடுத்து பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை 2வது ஒரு நாள் போட்டி ஹைலைட்ஸ் காட்டப்படும்.

Story first published: Tuesday, April 7, 2020, 13:37 [IST]
Other articles published on Apr 7, 2020
English summary
DD Sports will be showing Highlights of few remarkable matches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X