For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டீமை பத்தி குறை சொன்னதால் வினை..! கேப்டன் பதவி காலி..! டி 20 அணியிலும் டிஸ்மிஸ்.. முடிந்தது கதை..!

கேப்டவுன்: தென் ஆப்ரிக்கா டி 20 கிரிக்கெட் அணி கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயின்டன் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் கேப்டனாக இருந்த டுபிளெசிஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்கா அணி உலக கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்தது. இது அந்த அணிக்கும், நிர்வாகத்துக்கும் பெருத்த ஏமாற்றத்தை தந்தது. ரசிகர்களும் கடும் கொதிப்பில் இருந்தனர்.

அடுத்த ஆண்டு டி 20 உலக கோப்பை நடைபெறுகிறது. அதன்பிறகு, 2023ம் ஆண்டு உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் உள்ளது. இந்த இரண்டு முக்கிய தொடர்களிலும் அணியை வலுவானதாகவும், சிறந்த முறையில் கட்டமைக்கவும் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

எனவே சிறந்த அணியை கட்டமைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விரும்பியது. அதற்காக அணி வீரர்கள் விஷயத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்து. அதன் படி டெஸ்ட் அணிக்கான கேப்டனாக மட்டும் டு பிளிசிஸ் தொடர முடிவு எடுக்கப்பட்டது.

கேப்டன் நியமனம்

கேப்டன் நியமனம்

இந்நிலையில் டி20 அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயின்டன் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிக்கு டெம்பா பவுமா துணை கேப்டனாகவும், டி 20 அணிக்கு டஸ்சன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம்

இந்தியாவில் சுற்றுப்பயணம்

உலக கோப்பைக்கு பின் தென் ஆப்ரிக்கா முதலாவதாக இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறது. அந்த தொடரில் இந்தியாவுடன் டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அந்த போட்டிகளுக்கு அப்போது டி காக் கேப்டனாக செயல்படுவார்.

என்ன காரணங்கள்?

என்ன காரணங்கள்?

அணியில் இருந்து டுபிளசிஸ்சை ஓரங்கட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதற்கான சில காரணங்களை குறிப்பிடலாம். அதாவது, உலக கோப்பையை வெல்லும் அணியாக கருதப்பட்ட அணிகளில் தென் ஆப்ரிக்காவும் ஒன்று.

லீக்குடன் முடிந்த கதை

லீக்குடன் முடிந்த கதை

ஆனால் களத்தில் நடந்த கதையே வேறு. அந்த உலக கோப்பையில் செமத்தியாக உதை வாங்கிய தென் ஆப்ரிக்கா லீக் தொடரோடு நடையை கட்டியது. தென் ஆப்ரிக்கா உலக கோப்பை தொடரில் படுமோசமாக தோல்வி அடைந்தது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

இந்த தோல்விக்கு பின்னர் கேப்டன் டு பிளசிஸ் தோல்விக்கான காரணங்களாக பலவற்றை கூறினார். குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரை குறை கூறினார். அந்த தொடரில் தென் ஆப்ரிக்க வீரர்கள் ஆடியதே எங்களது தோல்விக்கு காரணம் என்று ஆணித்தரமாக கூறினார்.

ரபாடா காயம்

ரபாடா காயம்

முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிய டேல் ஸ்டெயின் உலக கோப்பை தொடரின் போது காயத்தால் வெளியேறினார். ககிசோ ரபாடா ஐபிஎல் தொடரில் ஆடியதால் அவரால் முழு மூச்சாக செயல்பட முடியவில்லை.

ஐசிசி மீது புகார்

ஐசிசி மீது புகார்

மேலும், லீக் தொடரின் போது தங்களுக்கு முதலில் மிகவும் கடினமான அணிகளை ஐசிசி வரிசைப் படுத்தி இருந்ததாகவும் பேசினார். இவையெல்லாம் தான் தோல்விக்கான காரணங்கள் என்று பட்டியலிட்டார்.

அந்த சர்ச்சை

அந்த சர்ச்சை

இந்த விவகாரங்கள் மட்டுமல்ல... அதற்கு முன்பு நட்சத்திர வீரர் ஏபி டிவிலியர்ஸ் சர்ச்சையும் ஓடிக்கொண்டிருந்தது. இவ்வாறாக பல சர்ச்சைகளுக்கு பின்னர் தென் ஆப்ரிக்க அணி உலக கோப்பை தொடரில் இருந்து படுமோசமாக தோல்வி அடைந்து வெளியேறியது.

Story first published: Wednesday, August 14, 2019, 13:24 [IST]
Other articles published on Aug 14, 2019
English summary
De cock named as t 20 captain instead of duplessis, south africa announced.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X