For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சார்.. என்னை கொன்னுடுவேன்னு மிரட்டுகிறார்..! பிரபல இந்திய வீரர் மீது போலீசில் புகார்.. பரபரப்பு

வதோதரா: இந்திய முன்னாள் வீரர் முனாப் படேல் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி, வதோதரா கிரிக்கெட் சங்க தலைவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்திய அணியின் சீனியர் வீரர் முனாப் படேல். இவர் இந்திய அணியின் சார்பாக 13 டெஸ்ட் போட்டிகள், 70 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தற்போது குஜராத் மாநிலம் வதோதரா கிரிக்கெட் சங்கத்தில் ஆலோசகராக இருந்து வருகிறார். இந்நிலையில் வதோதரா கிரிக்கெட் சங்க தலைவர் தேவேந்திர ஸ்ருதி என்பவர், தம்மை கொலை செய்துவிடுவேன் என்று முனாப் படேல் மிரட்டுவதாக போலீசில் புகார் கொடுதத்துள்ளார்.

அவரு நல்ல பிளேயர்.. ஆனா தப்பு பண்றாரே.. துவக்க வீரரை பற்றி புட்டு புட்டு வைத்த முன்னாள் வீரர்!அவரு நல்ல பிளேயர்.. ஆனா தப்பு பண்றாரே.. துவக்க வீரரை பற்றி புட்டு புட்டு வைத்த முன்னாள் வீரர்!

போலீசில் புகார்

போலீசில் புகார்

இந்த புகார் தொடர்பாக போலீஸ் கூறியதாவது: இது தொடர்பாக எங்களுக்கு புகார் வந்திருக்கிறது. அது தொடர்பாக விசாரித்து வருகிறோம். புகார் மீது இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.

முனாப் படேல் காரணம்

முனாப் படேல் காரணம்

அந்த புகாரில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: சங்கத்தில் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறேன். அதை பொறுக்காத முனாப் படேல், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு முனாப் படேல்தான் முழுக்க, முழுக்க காரணம் என்று தெரிவித்துள்ளார்.

மறுக்கும் முனாப்

மறுக்கும் முனாப்

ஒரு சிறந்த வீரரான முனாப் படேல் மீது போலீசில் அளிக்கப்பட்டுள்ள புகார் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தம்மீதான புகாரை முழுமையாக மறுத்திருக்கிறார் முனாப்.

தொடர்பு கிடையாது

தொடர்பு கிடையாது

அவர் கூறியிருப்பதாவது: தேர்வு குழுவில் அவருக்கு(தேவேந்திர ஸ்ருதி) ஏதோ பிரச்னை இருக்கிறது. நான் அணியின் ஆலோசகர் மட்டுமே. மற்றபடி எனக்கும் சங்கத்துக்கும் தொடர்பில்லை.

ஆதாரமற்றது

ஆதாரமற்றது

இந்த விவகாரத்தில் எனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. என் மீதான புகார் அடிப்படை ஆதாரமற்றது. அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, September 6, 2019, 18:10 [IST]
Other articles published on Sep 6, 2019
English summary
Death threaten complaint received against former Indian player munaf patel.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X