For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'கடவுளுக்கு' அவார்டு தர கவர்ன்மென்ட் எடுத்துக் கொண்ட நேரம் 'ஜஸ்ட்' 24 மணி நேரம்தான்!

டெல்லி: நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை சச்சின் டெண்டுல்கருக்குத் தருவது தொடர்பான முடிவை வெறும் 24 மணி நேரத்தில் எடுத்துள்ளது மத்திய அரசு.

ஒரு ஆர்டிஐ விசாரணை மூலம் இந்தத் தகவலைப் பெற்றுள்ளனர். படு வேகமாக இதுதொடர்பான முடிவை அரசு எடுத்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

ஒரு ஆர்டிஐ விசாரணைக்கு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதிலில் இந்த விவரம் அடங்கியுள்ளது.

கடைசிப் போட்டிக்கு முதல் நாள்

கடைசிப் போட்டிக்கு முதல் நாள்

சச்சின் டெண்டுல்கர் தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி மும்பையில் ஆடினார். அன்றைய தினமே பாரத ரத்னா விருதை அறிவிப்பதற்கான நடைமுறைகளை மத்திய அரசு தொடங்கி வி்ட்டது.

2 நாட்களில் முடிவு அறிவிப்பு

2 நாட்களில் முடிவு அறிவிப்பு

அதற்கு அடுத்த 2 நாட்களிலேயே விருது வழங்கும் முடிவை மத்திய அரசு அறிவித்தது.

பயோ டேட்டா அனுப்புங்க

பயோ டேட்டா அனுப்புங்க

முதலில், பிரதமர் அலுவலக இயக்குநர் ராஜீ்வ் டோப்னோ, மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு ஒரு தகவல் அனுப்பினார். அதில் சச்சினின் சுய விவரங்களை உடனடியாக அனுப்புமாறு கூறியிருந்தார். இந்த தகவல் நவம்பர் 14ம் தேதி மதியம் 1.35 மணிக்குப் போயுள்ளது.

மாலை 5.22 மணிக்கு பதில் போனது

மாலை 5.22 மணிக்கு பதில் போனது

இந்த விவரத்தை உடனடியாக சேகரித்த விளையாட்டு அமைச்சகம் அன்று மாலை 5.22 மணிக்கு பிரதமர் அலுவலகத்திற்கு பேக்ஸ் செய்தது. விளையாட்டு அமைச்சக அன்டர் செக்ரட்டரி டோமர் தான் இதை அனுப்பினார்.

நவம்பர் 15ம் தேதி எல்லாம் ஓவர்

நவம்பர் 15ம் தேதி எல்லாம் ஓவர்

நவம்பர் 15ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், பாரத ரத்னா விருதுக்கான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அவரும் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து 17ம் தேதி மன்மோகன் சிங்கே அறிவிப்பை வெளியிட்டார்.

தகவல் கோரிய புற்று நோயாளி

தகவல் கோரிய புற்று நோயாளி

இந்தத் தகவல்களை துபே என்பவர் பிரதமர் அலுவலகத்திடமிருந்து பெற்றுள்ளார். இவர் ஒரு புற்று நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 27ம் தேதி இதைஅவர் வாங்கியுள்ளார்.

Story first published: Tuesday, February 4, 2014, 8:27 [IST]
Other articles published on Feb 4, 2014
English summary
The process of conferring the country's highest civilian honour Bharat Ratna on batting maestro Sachin Tendulkar was initiated on the first day of his farewell 200th cricket Test on November 14, 2013 and the announcement made two days later, according to an RTI reply. A message was sent to Sports Ministry by the Prime Minister's Office(PMO) signed by Director Rajeev Topno for sending a bio-data of Tendulkar in a faxed format at 1.35 pm on November 14, 2013, according to a document provided by the PMO to sports enthusiast Hemant Dube in response to a Right to Information(RTI) query.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X