For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்றும் ஒரு மான்கட் பிரச்சினை..தீபக் சாஹர் செய்த சம்பவம்..அடுத்த பந்தே பதிலடி கொடுத்த தெ.ஆப்பிரிக்கா

இந்தூர் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் இந்திய அணி வீரர் தீபக் சாஹர் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

IND vs SA Mankad செய்வது போல் Deepak Chachar கொடுத்த Warning பயந்துபோன Stubbs

தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய ரோகித் சர்மாவால் பணிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த அணி வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் தீப்தி சர்மா செய்த மான்கட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்திய அணியில் அதிரடி மாற்றம்.. வெறும் 5 பேட்ஸ்மேன் தானா ? பும்ராவுக்கு பதில் யார்?இந்திய அணியில் அதிரடி மாற்றம்.. வெறும் 5 பேட்ஸ்மேன் தானா ? பும்ராவுக்கு பதில் யார்?

புதிய விதி

புதிய விதி

விதிகளுக்கு மீறி இந்திய அணி ஏதும் செய்யவில்லை என்று, விதிகளை வகுக்கும் எம்சிசி அமைப்பு விளக்கம் அளித்தும் கூட, இங்கிலாந்து அணி வீரர்கள் இது போங்கு ஆட்டம் என்று அழுகுனி குமார் போல் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். முதலில் வார்னிங் கொடுத்த பிறகு தான் அவுட் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

இன்று ஒரு சம்பவம்

இன்று ஒரு சம்பவம்

எம்சிசி வகுத்த புதிய விதிகளான இனி மான்கட்டையும் ரன் அவுட்டாக கருத வேண்டும் என்பதை அங்கீகரித்த ஐசிசி இது அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே கூறி இருந்தது. ஆனால், இங்கிலாந்து அணி இதனை தொடர்ந்து தவறு என்று கூறி வந்தது. இந்த நிலையில், இன்றும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

வார்னிங்

வார்னிங்

பந்துவீச்சு முனையில் நின்று கொண்டிருந்த ஸ்டப்ஸ் பந்தை வீசுவதற்கு முன்பே எல்லை கோட்டை தாண்டி ஓட வந்தார். அப்போது பந்துவீசிய தீபக் சாஹர், ஸ்டப்ஸை ரன் அவுட் செய்ய முயன்று, அடிக்காமல் நிறுத்திவிட்டு வார்னிங் கொடுத்தார். இதற்கு அடுத்த பந்தை ரூசோவ் சிக்சருக்கு விளாசினார்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

இந்த நிலையில், தீபக் சாஹர் வாய்ப்பு கிடைத்தும் ஏன் ரன் அவுட் செய்யவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. வார்னிங் தர தேவையில்லை என்று ஐசிசி கூறிய பிறகும், தீபக் சாஹ்ர் ஏன் அவுட்டாக்காமல் நின்றார். இது இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவை நாமே குறை சொல்வது போல ஆகாதா என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Tuesday, October 4, 2022, 21:43 [IST]
Other articles published on Oct 4, 2022
English summary
Deepak chahar gives warning to batsman by not hitting the stumps இன்றும் ஒரு மான்கட் பிரச்சினை..தீபக் சாஹர் செய்த சம்பவம்..அடுத்த பந்தே பதிலடி கொடுத்த தெ.ஆப்பிரிக்கா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X