For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு வந்து இறங்கிய அடுத்த இடி.. தீபக் சாஹருக்கு காயம்.. டி20 உலககோப்பைக்கு சந்தேகம்

மும்பை : டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்திய அணி நட்சத்திர வீரர் தீபக்சாகருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரர் யார் என்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

சமீபகாலமாக தீபக்சாகர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தீபக்சாகர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கினார்.

“பேட்ஸ்மேன் மட்டும் நல்லவரா?”.. தீபக் சஹாரின் ரன் அவுட் எச்சரிக்கை.. பிராட் ஹாக் கடும் விளாசல்! “பேட்ஸ்மேன் மட்டும் நல்லவரா?”.. தீபக் சஹாரின் ரன் அவுட் எச்சரிக்கை.. பிராட் ஹாக் கடும் விளாசல்!

பும்ரா இடம் யாருக்கு?

பும்ரா இடம் யாருக்கு?

இதனால் தீபக்சாகரை அணியில் கொண்டு வர வேண்டும் என பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் வலியுறுத்தினர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தீபச்சாகர், ஆவேஸ் கான், முகமது சிராஜ் என மூன்று வீரர்களும் இடம் பெற்றனர். இதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு பும்ராவின் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தீபக் சாஹருக்கு காயம்

தீபக் சாஹருக்கு காயம்

ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் தீபக்சாகர் இடம் பெறவில்லை. தொடர்ந்து டி20 போட்டி விளையாடி வருவதால் தீபக்சாகருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருக்கலாம் என நினைக்கப்பட்டது. ஆனால் பயிற்சியில் ஈடுபடும் போது தீபக்சாகர் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. தீபச்சாகர் ஓடும்போது அவரது கால் மடங்கி சுளுக்கு ஏற்பட்டிருக்கிறது .

விளக்கம்

விளக்கம்

இதனால் தீபக்சாகர் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. தீபக்சாகர் இந்திய அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த செய்தி இடியாக வந்து இறங்கியுள்ளது. எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி நிர்வாகம், தீபக்சாகருக்கு ஏற்பட்டிருக்கிற காயம் அபாயகரமானது அல்ல என்று தெரிவித்துள்ளது. தீபக் சாகர் உடைய காயம் குணமடைய சில நாட்கள் ஆகலாம்.

விலகல்

விலகல்

இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய ஒரு நாள் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டி20 உலக கோப்பை போட்டியில் தீபகசாகர் பங்கேற்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் முகமது ஷமி தான் மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட 99 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ வட்டார தகவல் தெரிவிக்கின்றன. தீபக்சாகர் ஒரு மாற்று வீரராக தான் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார்.

Story first published: Saturday, October 8, 2022, 0:08 [IST]
Other articles published on Oct 8, 2022
English summary
Deepak chahar twisted his leg and doubtful for sa odi series and t20 world cupஇந்தியாவுக்கு வந்து இறங்கிய அடுத்த இடி.. தீபக் சாஹருக்கு காயம்.. டி20 உலககோப்பைக்கு சந்தேகம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X