For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டின் கடைசி செஷனில் இந்திய வீரர்கள் வகுத்த வியூகம் ஆஸ்திரேலிய அணி பவுலர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் மொத்த முடிவும் கடைசி இந்த ஒரு செஷசனை நம்பித்தான் இருக்கிறது.

இங்கிலாந்துடன் மோத தயாராகும் இந்திய அணி... அணியை இன்று இறுதி செய்யும் தேர்வாளர்கள்! இங்கிலாந்துடன் மோத தயாராகும் இந்திய அணி... அணியை இன்று இறுதி செய்யும் தேர்வாளர்கள்!

இன்னும் 22-23 ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி 134 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி மேலும் 7 விக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கட்டாயம்

கட்டாயம்

இந்த நிலையில் கடைசி செஷனுக்கு முன்பு வரை இந்திய அணி வீரர்கள் பவுண்டரி அடித்து வந்தனர்.ஒரு ஓவருக்கு குறைந்தபட்சம் 4 ரன்னாவது எடுத்தனர். ஆனால் டீ பிரேக்கிற்கு பின் பண்ட் - புஜாரா இருவருமே ஆட்டத்தில் நிதானத்தை வெளிப்படுத்தினர்.

மோசம்

மோசம்

அதிலும் டீ பிரேக்கிற்கு பின் வந்த 3 ஓவர்களில் இவர்கள் இருவரும் ஒரு ரன் கூட அடிக்கவில்லை. அதன்பின்தான் தேவையான நேரங்களில் சிங்கிள் எடுத்தனர். ஆனால் அதிலும் கூட அப்பெரிய அளவில் ரிஸ்க் எடுக்காமல் மிகவும் பொறுமையாக ஆடினார்கள்.

 ஏன் இப்படி

ஏன் இப்படி

இந்திய அணிக்கு 134 ரன்கள்தான் தேவை. இப்படிப்பட்ட நேரத்தில் இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடி வெற்றி பெற முயற்சி செய்வார்கள் என்றுதான் ஆஸ்திரேலியா நினைத்தது. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் திடீரென டிபன்ஸ்ஆட தொடங்கி உள்ளனர். ஒரு ஓவருக்கு 20 ரன்கள் போதும் என்ற முடிவிற்கு இந்திய வீரர்கள் வந்துள்ளனர்.

காரணம்

காரணம்

பண்ட் - புஜாராவின் இந்த முடிவிற்கு காரணம் உள்ளது. டீ பிரேக்கிற்கு பின் ஆஸ்திரேலிய பவுலர்களின் திட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பிரேக்கிற்கு பின் பிட்ச் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பின் நிதானமாக ரன் எடுக்கலாம் என்ற முடிவில் இவர்கள் இருவரும் உள்ளனர்.

சிக்ஸ்

சிக்ஸ்

இதன் காரணமாகவே லைன் வீசிய 71 ஓவரில் பண்ட் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை சூடுபடுத்தினார். அதன்பின் ஸ்டார்க் ஓவரில் பண்ட் பவுண்டரி அடித்தார். இந்திய அணி முறையான திட்டத்துடன் பேட்டிங் இறங்கி உள்ளது. இந்திய அணியின் துல்லியமான இந்த ஆட்ட முறை கண்டிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய அழுத்தம் கொடுக்கும்.

Story first published: Tuesday, January 19, 2021, 14:20 [IST]
Other articles published on Jan 19, 2021
English summary
Defense now, Offense latter: Pujara joins with Pant to counter-attack Australia in the final test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X