For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

துளி போராட்டமின்றி சரண்டரான SRH - டி20 உலகக் கோப்பையில் சேர்க்காததற்கு வச்சு செய்த தவான்!

துபாய்: எந்தவித போராட்டமும் இன்றி டெல்லியிடம் சரணடைந்து இருக்கிறது சன் ரைடர்ஸ் ஹைதராபாத் அணி.

Recommended Video

DC vs SRH Delhi Capitals On Top In Chase Of 135 Runs Vs SRH | Oneindia Tamil

ஐபிஎல் தொடரில், இன்று (செப்.22) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின.

இதில் போட்டி தொடங்குவதற்கு முன்பு சன்ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த தமிழக வீரர் டி.நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.

Delhi capitals beat sun risers hyderabad and moved to no.1 spot again ipl 2021

இதனால் ஒரு மிகப்பெரிய சரிவுக்கு பிறகு களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 3 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ரிதிமான் 18 ரன்களில் அவுட்டானார். பிறகு கேப்டன் கேன் வில்லியம்சன் 18 ரன்களிலும், 11 கோடிகள் கொட்டிக் கொடுத்து வாங்கப்பட்ட மனீஷ் பாண்டே 17 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

பிறகு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் "சூப்பர் ஸ்டார்" கேதர் ஜாதவ் 3 ரன்களில் சரண்டராக, 20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட அப்துல் சமத் ஓரளவுக்கு போராடி 28 ரன்கள் அடித்தார். இவர் தான் ஹைதராபாத் அணியில் அதிகம் ரன் அடித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் ரஷீத் கான் 22 ரன்கள் எடுத்து கொஞ்சம் சப்போர்ட் எடுக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், நோர்ட்ஜே, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் ப்ரித்வி ஷா 11 ரன்களில் அவுட்டானாலும், ஷிகர் தவான் 37 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து பக்காவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இதன் மூலம் 422 ரன்களுடன் ஐபிஎல் தொடரில் மீண்டும் 'ஆரஞ்சு கேப்'-ஐ கைப்பற்றினார் தவான். ஆனால், இவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், காயத்துக்கு பிறகு மீண்டும் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 47 ரன்களுடனும், கேப்டன் ரிஷப் பண்ட் 21 பந்துகளில் 35 ரன்களும் குவித்து 17.5வது ஓவரிலேயே அணியை வெற்றிப் பெற வைத்தனர். இதன் மூலம் டெல்லி அணி 9 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது! 3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது!

அதே சமயம், தங்களது 8வது போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7வது தோல்வியை பதிவு செய்தது. இதனால் வெறும் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணியில் ஆக்ரோஷம் இல்லை, இன்டென்ட் இல்லை, வெற்றிப் பெறுவதற்கான வியூகமும் எடுபடவில்லை. அவர்களுக்கான மொமண்டமும் கிடைக்கவில்லை. இதனால், எந்தவித எதிர்ப்புமின்றி டோட்டலாக அந்த அணி டெல்லியிடம் சரண்டரானது. ஹைதராபாத் கைவசம் இன்னும் 6 போட்டிகள் மீதமுள்ளன. இதில் அனைத்து போட்டிகளில் வெற்றிப் பெற்றாலும் அந்த அணி பிளே ஆஃப் முன்னேறுவது கடினமே.

Story first published: Wednesday, September 22, 2021, 23:31 [IST]
Other articles published on Sep 22, 2021
English summary
Delhi capitals beat SRH ipl 2021 - டெல்லி கேபிட்டல்ஸ்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X