For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புள்ளிகள் பட்டியல்ல முதலிடத்தை புடிச்சுருக்கு டெல்லி கேபிடல்ஸ்... கலக்குறீங்க ரிஷப் ப்ரோ!

அகமதாபாத் : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி கொண்டுள்ளது.

மீதம் 14 பந்துகள் இருந்த நிலையில் இந்த வெற்றியை இளம் கேப்டன் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி சாத்தியப்படுத்தியுள்ளது.

சிஎஸ்கேவில் 3 பேருக்கு கொரோனா உறுதி... தற்போதைய நிலை என்ன.. ஐபிஎல்-ல் பரபரப்பு! சிஎஸ்கேவில் 3 பேருக்கு கொரோனா உறுதி... தற்போதைய நிலை என்ன.. ஐபிஎல்-ல் பரபரப்பு!

இதையடுத்து புள்ளிகள் பட்டியலிலும் 6 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

29வது போட்டி

29வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 29வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையில் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடபெற்ற நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மலன், கெயில் அதிரடி

மலன், கெயில் அதிரடி

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் அவுட்டாகாமல் 99 ரன்களை குவித்திருந்தார். டேவிட் மலன், கிறிஸ் கெயிலும் அதிரடியாக ஆடினர். கேஎல் ராகுல் அறுவை சிகிச்சை காரணமாக தொடரிலிருந்து நீங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷிகர் அதிரடி ரன் குவிப்பு

ஷிகர் அதிரடி ரன் குவிப்பு

இதையடுத்து ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஷிகர் தவான் அவுட்டாகாமல் 69 ரன்களை குவித்தார். பிரித்வி ஷா, ஸ்டீவ் ஸ்மித்தும் அதிரடியாக ஆடி முறையே 39 மற்றும் 24 ரன்களை அடித்தனர். இதையடுத்து அந்த அணி நேற்றைய போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

முதலிடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

முதலிடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதுவரை ஆடியுள்ள 8 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி, முதலிடத்தில் இருந்த சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

சிறப்பான கேப்டன்ஷிப்

சிறப்பான கேப்டன்ஷிப்

இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிலையில், கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ரிஷப் பந்த், சிறப்பான கேப்டன்ஷிப்பை வெளிப்படுத்தி வருகிறார். 2 போட்டிகளில் தோல்வியுற்றாலும் அணி வீரர்களை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

Story first published: Monday, May 3, 2021, 21:02 [IST]
Other articles published on May 3, 2021
English summary
DC made a positive start courtesy openers Prithvi Shaw and Dhawan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X