புத்திசாலித்தனமாக காயை நகர்த்திய டெல்லி அணி.. மற்ற அணிகள் கோட்டைவிட்டது!!

டெல்லி; டெல்லி கேப்பிடல்ஸ் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறது. இதனால் டெல்லி அணி யாரை தக்க வைக்கும் என பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்த நிலையில் டெல்லி அணி 4 வீரர்களை தேர்வு செய்துள்ளது. அதில் 2வது வீரர்களின் ஊதியத்தை 3 கோடி ருபாய் அளவு குறைத்துள்ளது.

ஐபிஎல்: யாரும் எதிர்பாராத முடிவு.. 3 அணிகளின் தக்கவைப்பு பட்டியல் வெளியானது.. யாருக்கெல்லாம் இடம்? ஐபிஎல்: யாரும் எதிர்பாராத முடிவு.. 3 அணிகளின் தக்கவைப்பு பட்டியல் வெளியானது.. யாருக்கெல்லாம் இடம்?

2வது வீரருக்கு ஊதியம் குறைக்கப்பட்டது, விதிகள் மீறிய செயல் என சில ரசிகர்கள் கூறிய நிலையில், விதிகளுக்கு உட்பட்டு தான் டெல்லி அணி செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், டெல்லி அணி தக்க வைத்துள்ள வீரர்கள் குறித்து தற்போது காணலாம்..

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 16 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. ரிஷப் பண்ட் அதிரடி வீரராக இருந்தாலும், கேப்டனாக அவர் இன்னும் தனது திறமையை நிரூபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல்

டெல்லி அணி 2வது வீரராக அக்சர் பட்டேலை தக்க வைத்துள்ளது. சுழற்பந்துவீச்சு மட்டும் பேட்டிங்கில் கலக்கிய அவருக்கு அதிகபட்சமாக 12 கோடி ரூபாய் தரப்பட வேண்டும். ஆனால் டெல்லி அணி அவரிடம் பேசி 9 கோடி ருபாய்க்கு அக்சர் பட்டேலை டெல்லி நிர்வாகம் தக்க வைத்துள்ளது. இதனால் அந்த அணிக்கு 3 கோடி ரூபாய் வரை மிச்சமாகியுள்ளது

பிரித்வி ஷா

பிரித்வி ஷா

இதனிடையே, மூன்றாவது வீரராக இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா தக்கவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெல்லி அணி நிர்வாகம் 7.5 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. அவருக்கு அதிகபட்சமாக 8 கோடி ரூபாய் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அவரை 50 லட்சம் குறைத்து ஒப்பந்தம் செய்துள்ளது.

நோக்கியா

நோக்கியா

இதே போன்று தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் நோக்கியாவுக்கு 6.5 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி அணி தக்க வைத்துள்ளது.இதில் விதியை விட 50 லட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கியுள்ளது. வீரர்களிடம் இப்படி பேசி ஊதியத்தை குறைத்து, கூடுதலாக வழங்கி டெல்லி அணி 3 கோடி ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளது. இதனிடையே முன்னாள்கேப்டன் ஸ்ரோயாஸ் ஐயர், அஸ்வின், ரபாடா ஆகியோரை டெல்லி அணி விடுவித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Delhi capitals Retened Four Players with Different salary slabs. DC Relieved Ashwin. Shreyas
Story first published: Tuesday, November 30, 2021, 23:56 [IST]
Other articles published on Nov 30, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X