கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!

டெல்லி : கடந்த 2020 ஐபிஎல் சீசனின் ரன்னர் அப்பாக வந்த டெல்லி கேபிடல்ஸ் அணி தான் இந்த சீசனில் தக்கவைக்கவுள்ள மற்றும் விடுவிக்கவுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த அணியில் ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான் உள்ளிட்ட 19 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 6 வெளிநாட்டு வீரர்களும் அடக்கம்.

இதேபோல 2 இந்திய வீரர்கள் மற்றும் 4 வெளிநாட்டு வீரர்களை விடுவிக்க உள்ளதாக டெல்லி கேபிடல்ஸ் அறிவித்துள்ளது.

ரன்னர் அப் அணி

ரன்னர் அப் அணி

கடந்த ஐபிஎல் 2020 சீசனில் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி, அனைத்து அணிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இறதிப் போட்டியில் வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்தது.

மும்பை இந்தியன்சிடம் தோல்வி

மும்பை இந்தியன்சிடம் தோல்வி

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்த அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் அனுபவம் மற்றும் வலிமை மிக்க மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சிறப்பாக மோதினாலும் வெற்றி பெற முடியாமல் கோப்பையை பறிகொடுத்தது.

களைகட்டும் அணி

களைகட்டும் அணி

இந்நிலையில இந்த ஐபிஎல் சீசனில் அந்த அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்ட 19 பேர் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக ஷ்ரேயாஸ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷிகர் தவான், ரிஷப் பந்த், இஷாந்த் சர்மா, அஸ்வின் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ரபடா தக்கவைப்பு

ரபடா தக்கவைப்பு

இந்நிலையில் கடந்த சீசனில் பர்ப்பிள் கேப்பை வெற்றி கொண்ட பௌலர் காகிசோ ரபடா, ஆன்ரிச் நோர்ட்ஜே, மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேனியல் சாம்ஸ் சிம்ரன் ஹெட்மயர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய 6 வெளிநாட்டு வீரர்களும் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

மோகித், துஷார் விடுவிப்பு

மோகித், துஷார் விடுவிப்பு

இந்நிலையில் 2 இந்திய வீரர்கள் உள்ளிட்ட 6 வீரர்களை டெல்லி கேபிடல்ஸ் அணி விடுவிக்க உள்ளது. மோகித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே ஆகிய இரு வீரர்கள் மற்றும் கீமோ பால், சந்தீப் லாமிசானே, அலெஸ் காரே, ஜேசன் ராய் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் ஏலத்தையொட்டி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
The franchise has released eight players which include two Indian and four overseas players
Story first published: Wednesday, January 20, 2021, 20:45 [IST]
Other articles published on Jan 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X