For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அட…! இப்படியும் ஒரு சாதனையா? ஐபிஎல் தொடரில் சரித்திரம் படைத்த தவான்

டெல்லி:பஞ்சாப் அணியுடனான நேற்றைய போட்டியின் மூலம் டெல்லி வீரர் ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, தவான் ஆகியோர் களம் இறங்கினர்.

நிதானமான ஆட்டம்

நிதானமான ஆட்டம்

அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி நிதானமாக ஆடியது.

வென்றது டெல்லி

வென்றது டெல்லி

ஷிகர் தவான் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் 19.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து டெல்லி 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதன்மூலம், புள்ளி பட்டியலில் டெல்லி அணி 3ம் இடத்தை பிடித்தது.

தவான் சாதனை

தவான் சாதனை

இந்த போட்டியில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்தார் டெல்லி அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான். அதன் மூலம் ஐபிஎல் அரங்கில் 500 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

வீரர்கள் பட்டியல்

வீரர்கள் பட்டியல்

ஐபிஎல் போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்த டாப் 5 வீரர்கள்:

ஷிகர் தவான் - 502 பவுண்டரிகள்

கவுதம் கம்பீர் - 491 பவுண்டரிகள்

சுரேஷ் ரெய்னா - 473 பவுண்டரிகள்

விராட் கோஹ்லி - 471 பவுண்டரிகள்

டேவிட் வார்னர் - 445 பவுண்டரிகள்

Story first published: Sunday, April 21, 2019, 10:49 [IST]
Other articles published on Apr 21, 2019
English summary
Delhi player dhawan made a record of having 500+ boundaries in ipl season.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X