For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

125 ஆண்டு கால "ரெக்கார்ட்".. அறிமுக போட்டியில்.. நம்ப முடியாத சாதனை - எழுந்து நின்று மரியாதை

லண்டன்: நியூசிலாந்து பேட்ஸ்மேன் டெவோன் கான்வே, இங்கிலாந்து மண்ணில் செமத்தியான சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். உண்மையில் அவர் இப்படி விளையாடுவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி, லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஜூன்.2) தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஓலே ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பிரேஸே ஆகியோருக்கு முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல், நியூசிலாந்து அணியில் டெவோன் கான்வே முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

 டொவேன் சதம்

டொவேன் சதம்

நியூசிலாந்து, முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. இதில், அறிமுக போட்டியிலேயே சதம் விளாசிய டெவோன் 136 ரன்களுடன் களத்தில் இருந்தார். சீனியர் வீரரைப் போல, ஷாட்ஸ் தேர்வில் எந்தவித குழப்பமும், பதட்டமும் இன்று விளையாடினார். அந்த அணுகுமுறை அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

 லார்ட்ஸில் சதம்

லார்ட்ஸில் சதம்

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில், அயல்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் அறிமுக போட்டியிலேயே சதமடிப்பது 25 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் நடக்கிறது. கடைசியாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தான் சதமடித்திருந்தார். அதன் பிறகு, கான்வே தான் இப்போது அடித்திருக்கிறார்.

 சாதனை தகர்ப்பு

சாதனை தகர்ப்பு

இந்நிலையில், இன்று (ஜூன்.3) 2வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதிலும், சிறப்பாக ஆட்டத்தை தொடங்கிய கான்வே 150 ரன்களைக் கடந்தார். அப்போது அவர் 156 ரன்கள் எடுத்த போது, இங்கிலாந்து மண்ணில் அறிமுக டெஸ்ட் வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன் எனும் சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் 1896ம் ஆண்டு, ரஞ்சித்சிங்ஹ்ஜிஸ் என்பவர், இங்கிலாந்தில் தனது அறிமுக போட்டியில் 154 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இதனை கான்வே இன்று முறியடித்துள்ளார். இதற்கு இங்கிலாந்து ரசிகர்களே எழுந்து நின்று கைத்தட்டி மரியாதை செலுத்தினர்.

 கைத்தட்டி மரியாதை

கைத்தட்டி மரியாதை

இதற்கு முன் 1896ம் ஆண்டு, ரஞ்சித்சிங்ஹ்ஜிஸ் என்பவர், இங்கிலாந்தில் தனது அறிமுக போட்டியில் 154 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இதனை கான்வே இன்று முறியடித்துள்ளார். இதற்கு இங்கிலாந்து ரசிகர்களே எழுந்து நின்று கைத்தட்டி மரியாதை செலுத்தினர்.

Story first published: Thursday, June 3, 2021, 21:51 [IST]
Other articles published on Jun 3, 2021
English summary
Devon Conway breaks a 125-year old record - டெவோன் கான்வே
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X