சாஹல் மனைவிக்கு.. இவ்ளோ ஃபாலோயர்ஸா?.. ஒவ்வொரு வீடியோவும் மனச அள்ளுதே

மும்பை: அதுயார்யா தனஸ்ரீ வெர்மா?-னு கேட்காதீங்க. நம்ம இந்திய ஸ்பின்னர் யுவேந்திர சாஹலோட அன்பான மனைவி தான் இவர்.

ரொம்ப ஆக்டிவான பொண்ணு. டான்ஸ் தான் உலகம். ஹிப் ஹாப் தெரியும். முக்கியமா யூடியூபர். Dhanashree Verma Company-ன்னு ஒரு நடன நிறுவனமே வச்சு நடத்துறாங்கன்னா பார்த்துக்குங்க.

8- 9 நாட்களாக தூங்கல.. கிரிக்கெட்டே போச்சினு நினச்ச.. ஐபிஎல்-ல் சந்தித்த வேதனைகள்..அஸ்வின் ஓபன் டாக்

இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சாஹல் - தனஸ்ரீ திருமணம் நடைபெற்றது. சாஹலை ரொம்பவே நேசித்த தனஸ்ரீக்கு கல்யாண நாள் முழுவதும் ஒரே சிரிப்பு தான், குஷி தான்.

 இப்போது 4 மில்லியன்

இப்போது 4 மில்லியன்

சரி.. விஷயத்துக்கு வருவோம். சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் 1.5 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் வைத்திருந்த தனஸ்ரீக்கு இப்போது நான்கு லட்சம் ஃபாலோயர்ஸ் வந்து குவித்துள்ளனர். இதனால், மீண்டும் அம்மணி ஏக குஷி. இதுகுறித்த தனது மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

 பெரிய மனசு

பெரிய மனசு

தனது பதிவின் மூலம் அவர் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். லைக்ஸ், கமெண்ட்ஸ் மற்றும் ஷேர்ஸ் மூலம் ரசிகர்கள் காட்டிய நிலையான அன்பு மற்றும் பாராட்டுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது வீட்டிலேயே இருக்கவும் பாதுகாப்பாக இருக்கவும் தனது ரசிகர்களை அவர் வலியுறுத்தியுள்ளார். (என்ன மனசு பாருங்க மக்களே!)

 ரசிகர்களுக்கு கோரிக்கை

ரசிகர்களுக்கு கோரிக்கை

மேலும் அவர் தனது நன்றி பதிவில், அவர் விரைவில் ஒரு அற்புதமான வீடியோவை பகிர்ந்துகொள்வார் என்றும், ரசிகர்கள் அதை ரீமிக்ஸ் ரீல் செய்து அவளுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எல்லாம் சரி.. நம்ம சாஹல் எங்கப்பா? எந்த வீடியோவில் காணோம்?

 வீட்டில் பத்திரமாக

வீட்டில் பத்திரமாக

சாஹலை சல்லடைப் போட்டு தேடிய பிறகு தான் தெரிந்தது, அவர் மிகவும் நல்ல பிள்ளையாக, வெளியே தலையை கூட நீட்டாமல், வீட்டிலிலேயே அமைதியாக இருக்கிறார் என்று. காரணம், சார் ஜுலை மாதம் இலங்கை செல்லும் இந்திய 'பி' அணியில் கலந்து கொள்ளவிருக்கிறார். அத்தொடருகக்கான குவாரண்டைனில் இணைவதற்கு முன்பு, வீரர்கள் தனித்தனியாக PCR Test எடுத்து நெகட்டிவ் ரிசல்ட் காட்டியிருக்க வேண்டும். இதற்காக அவர் பத்திரமாக அவர் வீட்டிலேயே இருக்கிறாராம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dhanashree Verma 4 Million Insta Followers - தனஸ்ரீ வெர்மா
Story first published: Thursday, June 10, 2021, 21:17 [IST]
Other articles published on Jun 10, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X