For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீட்டுக்குள்ளேயே இருங்க.. பாதுகாப்பா இருங்க.. கொரோனாவை வெல்வோம்.. தவல் குல்கர்னி

டெல்லி: மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று மக்கள் அதைக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் விளையாட்டு உலகமும் அதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

கொரோனாவைரஸ் தலை விரித்தாடத் தொடங்கியதுமே உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டு விட்டன. எங்குமே இப்போது எந்தப் போட்டியும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் வீரர்கள், வீராங்கனைகள் விதம் விதமாக பொழுதைப் போக்கிக் கொண்டுள்ளனர். கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்கள், பேச்சுக்கள், கோரிக்கைகளில் பலர் இறங்கியுள்ளனர்.

 செய்தி வெளியிட்ட தவல் குல்கர்னி

செய்தி வெளியிட்ட தவல் குல்கர்னி

அந்த வகையில் கிரிக்கெட் வீரர் தவல் குல்கர்னியும் ஒரு வீடியோ போட்டுள்ளார். அதில் இன்று நாடுமுழுவதும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த மக்கள் ஊரடங்கு குறித்து அவர் பேசியுள்ளார். குறிப்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வீடியோவில், அனைவரும் கொரோனாவைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தேவையில்லாமல் வீடுகளை விட்டு வராதீர்கள்

அனைவரும் வீடுகளிலேயே இருங்கள். தேவையில்லாமல் வெளியே வராதீர்கள். இந்திய மக்கள் அனைவரும் இந்த சோதனையான காலத்தில் ஒருங்கிணைந்து கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும். அதற்கு அரசுகளுக்கு நாம் ஒத்துழைப்பு தர வேண்டியது அவசியம். எனவே வீடுகளிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று தவல் குல்கர்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 சுத்தம் மிக மிக அவசியம்

சுத்தம் மிக மிக அவசியம்

அது மட்டுமல்லாமல் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும், எப்படி முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார் தவல் குல்கர்னி. அவர் சொல்வதும் சரிதான்.. அனைவரும் முன்னெச்சரிக்கையுடனும், தவறான, வதந்தியான தகவல்களை நம்பாமல் உண்மையான தகவல்களை மட்டுமே கடைப்பிடித்து வந்தாலே போதும், பாதி வெற்றி கிடைத்து விடும்.

 ஐபிஎல் தள்ளிப் போவதால் ஏமாற்றம்

ஐபிஎல் தள்ளிப் போவதால் ஏமாற்றம்

இதற்கிடையே, கொரோனாவைரஸ் காரணமாக தள்ளிப் போயுள்ள ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் நடைபெறாது என்றே கூறப்படுகிறது. ஒரு வேளை அப்படியே நடந்தாலும் கூட அது ஏப்ரலில் இருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவே இந்திய கிரிக்கெட் வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களும் கூட ஏமாற்றமடைந்துள்ளனர். ஆனால் அதை விட முக்கியமானது கொரோனா என்பதால் அனைவரும் அதுதொடர்பான விழிப்புணர்வுக்குள் ஆழ்ந்துள்ளனர்.

Story first published: Sunday, March 22, 2020, 10:33 [IST]
Other articles published on Mar 22, 2020
English summary
Dhawal Kulkarni has requested people to take all Precautions to Fight Coronavirus
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X