For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு டீம் தான் ஜெயிக்கணும்... என்னோட சாதனை முக்கியமில்ல.. அந்த பெருந்தன்மையான வீரர் யாரு?

எனக்கு டீம் தான் ஜெயிக்கணும்... என்னோட சாதனை முக்கியமில்ல.. அந்த பெருந்தன்மையான வீரர் யாரு?

கொல்கத்தா: எனது தனிப்பட்ட சதமோ அல்லது சாதனையோ முக்கியமல்ல... அணியின் வெற்றியே முக்கியம் என்று டெல்லி வீரர் ஷிகர் தவான் கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரின் 26 வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. கொல்கத்தா மற்றும் டெல்லி கேப்பிடல் இரு அணிகளும் மோதின.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி. பேட்டிங் செய்ய துவங்கிய கொல்கத்தா அணிக்கு முதல் பந்திலேயே இஷாந்த் சர்மா டென்லியை கிளீன் போல்டாகி வெளியேற்றினார். அதன்பின் உத்தப்பா (28) மற்றும் கில் (65) இருவரும் நிதானமாக ஆடினர்.

KKR vs DC : 3 ரன்களில் சதத்தை கோட்டை விட்ட தவான்... ஆனாலும் டெல்லி அசத்தல் வெற்றி KKR vs DC : 3 ரன்களில் சதத்தை கோட்டை விட்ட தவான்... ஆனாலும் டெல்லி அசத்தல் வெற்றி

178 ரன்கள் சேர்ப்பு

178 ரன்கள் சேர்ப்பு

ராணா (11) மொரிஸ் பந்தில் போல்டாகி வெளியேறினார். வழக்கம்போல அதிரடியை துவங்கிய ரசல் 21 பந்துகளில் 45 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 178 ரன்கள் எடுத்தது கொல்கத்தா அணி.

ஸ்ரேயாஸ் ஏமாற்றம்

ஸ்ரேயாஸ் ஏமாற்றம்

அடுத்து இலக்கை துரத்திய டெல்லி அணியின் துவக்க வீரர் பிருத்திவி ஷா (14) பிரசித் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (6) இம்முறையும் அணிக்கு ஏமாற்றம் அளித்தார். ரசல் பந்தில் தினேஷ் கார்த்திக் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அருமையான ஆட்டம்

அருமையான ஆட்டம்

பின்னர் ஜோடி சேர்ந்த தவான் (97) மற்றும் பன்ட் (46) இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர் ரிஷப் பண்ட் அரை சதம் அடிக்கும் வாய்ப்பையும், ஷிகர் தவான் சதம் அடிக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டார். இறுதியிலும் 19வது ஓவரில் இலக்கை கடந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி அணி.

அணியே முக்கியம்

அணியே முக்கியம்

இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றி பெற செய்த ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனக்கு இது முதல் டி20 சதமாக இருக்கும் என்று தெரியும். ஆனால், தனி நபரின் சாதனையை விட அணியின் இலக்கு மிகவும் முக்கியமானது.

ஜெயிக்க வேண்டும்

ஜெயிக்க வேண்டும்

எனவே நான் எனது சதத்தை நினைவில் எடுத்துக்கொள்ள போட்டியை வெல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். நினைத்தது போலவே பலன் கிடைத்தது. இது பேட்டிங் செய்ய மிகச்சிறந்த மைதானம் என்றார்.

Story first published: Saturday, April 13, 2019, 10:19 [IST]
Other articles published on Apr 13, 2019
English summary
Shikhar Dhawan emphasises on team goals after missing out on maiden T 20 century against KKR.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X