சிரிப்பு எவ்வளவு நேரத்திற்கு இருக்குமோ.11 நேர பயணம்..டி20 தொடருக்காக ஷிகர் மற்றும் ஸ்ரேயாஸின் செயல்

அகமதாபாத்: கொரோனா அச்சுறுத்தல் இன்றி இந்திய அணியுடன் சேர்வதற்காக தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்ஆகியோர் செய்துள்ள விஷயம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டி 20 கிரிக்கெட் தொடர் வரும் 12ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக வீரர்கள் அணியில் இணைந்து வருகின்றனர்.

இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல்

இந்நிலையில் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சாலை மார்க்கமாக அகமதாபாத் சென்றுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

டி20 தொடர்

டி20 தொடர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவரும் இந்திய அணி, அடுத்ததாக டி20 தொடர்களில் ஆடவுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் முறையே மார்ச் 12, 14, 16, 18 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

விஜய் ஹாசாரே

விஜய் ஹாசாரே

தற்போது பிரபல உள்நாட்டு தொடராக விஜய் ஹசாரே ட்ராபி நடைபெற்று வருகிறது. இதில் ஷிகர் தவான் டெல்லி அணிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கும் ஆடி வருகின்றனர். இவர்கள் இருவருமே எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சாலை மார்க்கம்

சாலை மார்க்கம்

ஸ்ரேயாஸ் மற்றும் ஷிகர் தவான் இருவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாலை மார்க்கமாக அகமதாபாத் செல்ல முடிவெடுட்த்தனர். அதன்படி இருவரும் ஜெய்பூரில் சந்தித்துக் கொண்டு அங்கிருந்து காரில் 11 மணி நேரம் பயணம் செய்து அகமதாபாத்தில் இந்திய அணியுடன் சேர்ந்தனர். இது குறித்து ஸ்ரேயாஸ் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவசியமில்லை

அவசியமில்லை

இருவரும் விமானம் போன்ற பொது போக்குவரத்துகள் எதிலும் செல்லாமல் காரில் சென்றதால் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் அவசியமாகாது. எனவே கிரிக்கெட் வீரர்கள் பலரும் குறைந்த தூரத்திலான பயணங்களுக்கு சாலை போக்குவரத்தையே தேர்வு செய்கின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dhawan & Shreyas Iyer undertake an 11-hour road trip to join Team India in Ahmedabad
Story first published: Wednesday, March 3, 2021, 17:35 [IST]
Other articles published on Mar 3, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X