For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பார்முக்கு வந்த தவான்… 28வது அரைசதம்… மீண்டும் களம் கண்ட துவக்க ஜோடி

Recommended Video

4வது ஒருநாள் போட்டி... இந்தியா முதலில் பேட்டிங்

மொகாலி:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தமது 28வது அரை சதம் கடந்த தவான்... நீண்ட நாட்களுக்கு பிறகு பார்முக்கு வந்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-2 என்ற கணக்கில் இருக்கிறது.

இந்திய அணி 2 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறு. மொகாலி ஆட்டத்தில் பெறும் வெற்றி தொடரை கைப்பற்ற உதவும் என்பதால், இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பார்க்கப்படுகிறது.

இந்தியா - ஆஸி. 4வது ஒருநாள் போட்டி தான் கடைசி.. இனிமே மொஹாலியில் மேட்ச் நடக்காது?! இந்தியா - ஆஸி. 4வது ஒருநாள் போட்டி தான் கடைசி.. இனிமே மொஹாலியில் மேட்ச் நடக்காது?!

இந்தியா பேட்

இந்தியா பேட்

ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்ததார். இந்திய அணி சார்பில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றங்கள்

மாற்றங்கள்

தோனிக்கு பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். சமிக்கு பதிலாக புவனேஷ்வர் குமார், ரவிந்திர ஜடேஜாவுக்கு பதிலாக யஜூவேந்திர சாஹலும், அம்பதி ராயுடுவுக்கு பதிலாக கே.எல்.ராகுலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடக்க வீரர்கள்

தொடக்க வீரர்கள்

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டோனிஸ், லயானுக்கு பதிலாக, பெஹரன்டார்ப், டர்னர் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரர்களாக தவானும், ரோகித்தும் களம் இறங்கினர்.

அபார ஜோடி

அபார ஜோடி

பல ஆட்டங்களில் சொதப்பல்.. என்ன செய்வது என்று கடும் விமர்சனங்களுக்கு ஆளான இந்த ஜோடி.. தமது பேட்டால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தொடக்கம் முதலே இருவரும் ஆஸி. அணியின் பந்தை லாவகமாக எதிர்கொண்டனர்.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

தவறான பந்துகளை தேர்ந்தெடுத்து அருமையாக ஆடினர். பல போட்டிகளில் ரன்கள் எடுக்க தடுமாறிய தவான்... இந்த போட்டியில் விமர்சனம் கூறியவர்களின் வாயை அடைத்துவிட்டார்.

28வது அரைசதம்

28வது அரைசதம்

தொடர்ந்து தடுமாற்றத்தில் இருந்த அவர் மொகாலி போட்டியில் தமது 28வது அரை சதத்தை கடந்து பார்முக்கு திரும்பி உள்ளார். நீண்ட நாட்களாக இழந்த பார்மை அவர் மீட்டுள்ளதால்.. உலக கோப்பை தொடருக்கான துவக்க ஜோடி மீண்டும் களமிறங்கி இருக்கிறது என்றே சொல்லலாம்.

Story first published: Sunday, March 10, 2019, 15:37 [IST]
Other articles published on Mar 10, 2019
English summary
Dhawan turns the clock back and scores a fifty to roar back to form.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X