2000 கோழிகள் வேண்டாம்.. ஆர்டரை கேன்சல் செய்த தோனி.. இந்த பயம் தான் காரணம்.. பரபர தகவல்!

ராஞ்சி : தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.

10 வீரர்கள் அவுட்.. 2 பேர் ஆடுவது டவுட்.. இந்திய அணியில் மிச்சம் இருப்பது எத்தனை பேர்..முழு விபரம்!

அதன் ஒரு பகுதியாக தன் பண்ணையில் கோழிகள் வளர்த்து வருகிறார். நாட்டுக் கோழிகளை வளர்க்க ஆசைப்பட்ட தோனி கடந்த சில மாதங்களுக்கு முன் சில குறிப்பிட்ட வகை கோழிகளை கொள்முதல் செய்ய முன்பணம் கொடுத்து இருந்தார்.

ரத்து

ரத்து

ஆனால், தற்போது பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் அந்த கொள்முதலை ரத்து செய்துள்ளார் தோனி. இந்த தகவலை தோனிக்காக கோழிகளை தயார் செய்து வைத்திருந்த பண்ணை உரிமையாளர் கூறி உள்ளார்.

கோழிகள்

கோழிகள்

தோனிக்கு கடக்நாத் கோழிகள் என்றால் பிரியம் அதிகம். அதை நம் ஊரில் கருங்கோழி என்று அழைக்கிறார்கள். அத்துடன் கிராமப்ரியா என்ற கோழி வகை மீதும் தோனிக்கு பிரியம் அதிகம். இந்த இரண்டு வகை கோழிகளையும் வாங்கி தன் பண்ணையில் வளர்த்து வருகிறார் தோனி.

2000 கோழிகள்

2000 கோழிகள்

அதை அதிக அளவில் வளர்க்க முடிவு செய்து 2000 கோழிகளுக்கு முன் பணம் கொடுத்து இருந்தார். கடக்நாத் கோழிகளை வாங்க மத்தியபிரதேசத்தில் இருந்தும், கிராமப்ரியா கோழிகளை வாங்க ஹைதராபாத்தில் இருந்தும் பண்ணைகளை தேர்வு செய்தார்.

பறவைக் காய்ச்சல்

பறவைக் காய்ச்சல்

அவர்களுக்கு முன்பணம் செலுத்தி இருந்த நிலையில், தற்போது பறவைக் காய்ச்சல் அச்சம் நாடு முழுவதும் இருப்பதால் அவற்றை இப்போது அனுப்ப வேண்டாம் என தோனி கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது. இது அந்த பண்ணையாளர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Dhoni cancels chicken orders over bird flu scare
Story first published: Wednesday, January 13, 2021, 18:58 [IST]
Other articles published on Jan 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X