For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தல தான் இதுலயும் பெஸ்ட்.. சுதந்திர தினத்தை தரமாக கொண்டாடிய தோனி.. வைரல் புகைப்படங்கள்!

லடாக் : சுதந்திர தினத்தை ஒட்டி கிரிக்கெட் வீரர் தோனி இராணுவ மருத்துவமனைகளில் இருக்கும் இந்திய இராணுவத்தினரை சந்தித்து இருக்கிறார்.

அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தோனி ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் வரை இந்திய இராணுவத்தினருடன் நேரம் செலவிட்டு, இராணுவ பயிற்சிகள் மற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

கிரிக்கெட்டில் ஓய்வு

கிரிக்கெட்டில் ஓய்வு

2019 உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் தோனி இரண்டு மாத காலம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அந்த காலத்தை இந்திய இராணுவத்தில் செலவிட உள்ளதாக கூறப்பட்டது. தோனி இந்திய இராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கலோனல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

16 நாட்கள் பணி

16 நாட்கள் பணி

இந்திய இராணுவம் தோனிக்கு ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 15 வரை சுமார் 16 நாட்கள் பணியில் இருக்க அனுமதி அளித்தது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்ட லடாக் பகுதியில் இராணுவத்தினருடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் தோனி.

வைரல் வீடியோ

சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள், இராணுவ லடாக் பகுதியில் இருக்கும் இராணுவ மருத்துமனைக்கு சென்ற தோனி அங்கிருந்த இராணுவத்தினரை சந்தித்தார். அவர்களுடன் டீ குடித்துக் கொண்டே அவர் பேசும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

வாலிபால் ஆடினார்

இதற்கு முன்பு சக இராணுவ வீரர்களுடன் வாலிபால், புட்பால் விளையாடிய புகைப்படங்களும் வைரல் ஆனது. ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், தோனி இந்திய இராணுவத்தின் தூதராக செயல்படுகிறார். இராணுவத்தினரை வெகுவாக ஊக்குவித்து வருகிறார் என குறிப்பிட்டார்.

சியாச்சின் செல்கிறார்

ஆகஸ்ட் 15 அன்று தோனி சியாச்சின் பகுதிக்கு சென்று அங்கு போரில் வீர மரணமடைந்த வீரர்களின் நினைவகத்தில் மரியாதை செலுத்த உள்ளார். அத்துடன் அவரது இராணுவப் பணி முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

பாராட்டு

பாராட்டு

தோனி இராணுவத்தில் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் சுதந்திர தினத்தை தோனி போல யாரும் இந்த முறை கொண்டாடவில்லை. நாட்டுக்காக உயிரை பணயம் வைக்கும் இராணுவ வீரர்களுடன் அவர் நேரம் செலவிட்டு வருவதை குறிப்பிட்டு அவரை பாராட்டி வருகின்றனர்.

ஆபத்து பகுதி

ஆபத்து பகுதி

தோனி தற்போது இருக்கும் பகுதி ஆபத்து நிறைந்த பகுதி என்றும், அங்கே நிறைய போராட்டக்காரர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், தோனி காஷ்மீரில் இருந்த அதே நேரம் தான் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அங்கே பதற்ற நிலை ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 15, 2019, 15:01 [IST]
Other articles published on Aug 15, 2019
English summary
Dhoni celebrating Independence day with Kahsmir Jawans at hospital
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X