For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்ம தோனியா இது.. கொஞ்ச நாளில் ஐபிஎல்லை வச்சுக்கிட்டு.. என்ன இப்படி களம் இறங்கிட்டாரு..வைரல் வீடியோ

ராஞ்சி: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி, கிரிக்கெட் மட்டுமின்றி வேறு பல விஷயங்களிலும் ஆர்வம் காட்ட கூடியவர். கிரிக்கெட் வீரராக இருந்த போதே இவர் இந்திய ராணுவத்தில் தீவிரமாக ஆர்வம் காட்டி வந்தார்.

 ப்பா என்ன மனுஷன்யா.. ராகுல் டிராவிட் சொன்ன ஒரு வார்த்தை.. கொஞ்சமாவது பார்த்து திருந்துங்க பாஸ்! ப்பா என்ன மனுஷன்யா.. ராகுல் டிராவிட் சொன்ன ஒரு வார்த்தை.. கொஞ்சமாவது பார்த்து திருந்துங்க பாஸ்!

தனக்கு வழங்கப்பட்ட கவுரவ லெப்டினன்ட் பொறுப்பை தீவிரமாக எடுத்துக்கொண்டு, முறையாக பயிற்சி எல்லாம் கூட தோனி மேற்கொண்டார். இந்திய ராணுவத்தின் பாரா கிளைடிங் பிரிவில் இவர் முறையான பயிற்சி பெற்றவர்.

தோனி பயிற்சி

தோனி பயிற்சி

ராணுவம் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் தோனி ஆர்வம் காட்டி வருகிறார். பைக் ஓட்டுவது, ஹெலிகாப்டர் ஓட்டுவது, பாரா கிளைடிங், ராணுவ பயிற்சி என்று பல விஷயங்களில் தோனி ஆர்வம் காட்ட கூடியவர். தற்போது விவசாயத்தில் தோனி தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார்.

எப்படி

எப்படி

தனது பண்ணை வீட்டில் உள்ள பல ஏக்கர் நிலத்தில் நெல் மற்றும் கோதுமை பயிரிட்டு வருகிறார். இந்த நிலத்தில் இவர் ஸ்ட்ராபெரி, முட்டைகோஸ், பீட்ருட், கேரட், முள்ளங்கி என்று பல விதமான காய்கள் பயிரிட்டு உள்ளார். கீரைகளையும் இவர் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

சிறப்பு

இயற்கை விவசாய முறைப்படி இவர் விவசாயம் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அதோடு இவரின் பயிர்களை வாங்கிக்கொள்ள அபுதாபியில் உள்ள சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். துபாயில் இருக்கும் நிறுவனம் ஒன்று இவரின் பயிர்களை மொத்தமாக வாங்கிக்கொள்ள முடிவு செய்துள்ளது.

முடிவு செய்தது

முடிவு செய்தது

இந்த நிலையில் தோனி தற்போது விவசாயம் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. டிராக்டர் ஓட்டியபடி இவர் வயலில் வேலை செய்யும் வீடியோ ஆகும் இது. நிலத்தை உழுவதற்காக தோனி இப்படி டிராக்டர் ஓட்டினார். தோனி இப்படி டிராக்டர் ஓட்டுவதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

விவசாயம்

விவசாயம்

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை செய்யும் போது தோனி மட்டும் விவசாயம் மீது கவனம் செலுத்துகிறார். இது உண்மையில் மிகப்பெரிய விஷயம். தோனியை இதற்காக பாராட்ட வேண்டும். விவசாயம் மீதான தோனியின் விருப்பத்தை, ஈடுபாட்டை நாங்கள் பாராட்டுகிறோம் என்று பலர் டிவிட் செய்துள்ளனர்.

கிண்டல்

கிண்டல்

இன்னும் சிலர் தோனியை கிண்டல் செய்துள்ளனர். கடந்த ஒன்றரை வருடமாக தோனி பெரிய அளவில் கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை. இன்னும் சில நாட்களில் ஐபிஎல் நடக்கும். அதற்காக தோனி பயிற்சி மேற்கொள்ளாமல் இப்படி வேறு வேலைகளில் கவனம் செலுத்துவது சிஎஸ்கே அணிக்குத்தான் சிக்கலாக முடியும் என்று விமர்சனம் செய்துள்ளனர்.

Story first published: Monday, January 25, 2021, 14:19 [IST]
Other articles published on Jan 25, 2021
English summary
Dhoni completely become a farmer in his farm land ahead of IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X