For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினமும் போனால்.. ஒன்னு கூட மிஞ்சாது.. தோனி தோட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி.. வைரல் வீடியோ!

ராஞ்சி: தோனி ஸ்ட்ராபெர்ரி பழத்தை பறித்து உண்ணும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் தன் பண்ணையில் விவசாயம் செய்து வருகிறார்.

ஸ்ட்ராபெர்ரி செடியை வளர்த்து வரும் அவர், அதில் இருந்து பழங்களை பறித்து உண்டார்.

வீடியோ

தோனி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் தோனி தானே மொபைல் கேமராவில் வீடியோ எடுத்துள்ளார். தன் பண்ணையில் ஸ்ட்ராபெர்ரி செடிகளில் பழங்கள் இருப்பதை கண்ட அவர் அதை பறித்து உண்டார். அதை வீடியோவாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தோனி என்ன சொன்னார்?

தோனி என்ன சொன்னார்?

அந்த பதிவில் தோனி வேடிக்கையாக ஒரு விஷயத்தை கூறி உள்ளார். தான் தினமும் பண்ணைக்கு சென்றால் சந்தைக்கு அனுப்ப ஒரு ஸ்ட்ராபெர்ரி கூட மிஞ்சாது என கூறி உள்ளார். அவருக்கு பிடித்த பழம் ஸ்ட்ராபெர்ரி என்பதை இப்படி கூறி உள்ளார் தோனி.

விவசாயம்

விவசாயம்

தோனி 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் தான் கடைசியாக சர்வதேச போட்டியில் ஆடி இருந்தார். அதன் பின் அவர் 2020 ஐபிஎல் தொடரில் மட்டுமே பங்கேற்றார். தற்போது ஓய்வு நேரத்தில் அவர் தீவிரமாக விவசாயத்தில் இறங்கி உள்ளார்.

துபாய்க்கு ஏற்றுமதி

துபாய்க்கு ஏற்றுமதி

சமீபத்தில் தோனி தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை அவர் துபாய்க்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக செய்திகள் வெளியானது. அந்த அளவுக்கு தோனி விவசாயத்தில் மூழ்கி இருக்கிறார். கோழி வளர்ப்பது உள்ளிட்ட பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

Story first published: Friday, January 8, 2021, 20:07 [IST]
Other articles published on Jan 8, 2021
English summary
Dhoni eating strawberries from his own farm
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X