For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸாருதீன் சாதனையை சமன் செய்தார் டோணி!

நாட்டிங்காம்: முன்னாள் கேப்டன் முகம்மது அஸாருதீனின் சாதனையை சமன் செய்துள்ளார் கேப்டன் டோணி.

அதாவது கேப்டனாக 90 ஒரு நாள் போட்டிகளை வென்றிருந்தார் அஸாருதீன். இதுவே ஒரு இந்திய கேப்டனின் அதிகபட்ச ஒரு நாள் போட்டி வெற்றிச்சாதனையாக இருந்து வந்தது. தற்போது டோணியும் 90 வெற்றிகளைப் பெற்று அஸாருதீனுடன் இணைந்துள்ளார்.

நாட்டிங்காமில் இங்கிலாந்து அணியுடனான 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் இந்த சமன் சாதனையைச் செய்தார் டோணி.

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒரு ஆறுதல்

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒரு ஆறுதல்

டெஸ்ட் தோல்விகள், பயிற்சியாளர் குறித்த கருத்து என சர்ச்சைகள், வருத்தங்கள், தொய்வுகளுக்கு மத்தியில் இது ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது டோணிக்கு.

அடுத்தடுத்து 2 போட்டிகளில் வெற்றி

அடுத்தடுத்து 2 போட்டிகளில் வெற்றி

டெஸ்ட் தொடரை பரிதாபமாக இழந்த இந்திய அணி தற்போது 2 மற்றும் 3 வது ஒரு நாள் போட்டிகளில் அதிரடியாக வென்று ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

2-0 முன்னிலை

2-0 முன்னிலை

5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

சாதனை சமன்

சாதனை சமன்

இதன் மூலம் 90 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக வெற்றி கண்டுள்ளார் டோணி.

அஸாருதீனை விட பெஸ்ட்

அஸாருதீனை விட பெஸ்ட்

அதேசமயம், 90 வெற்றிகளை 161 போட்டிகளைச் சந்தித்து 7 வருடங்களில் பெற்றுள்ளார் டோணி. ஆனால் அஸாருதீனுக்கு 9 வருடங்கள் தேவைப்பட்டது. 174 போட்டிகளையும் அவர் சந்திக்க நேரிட்டது. அந்த வகையில் அஸாரை விட டோணியே சிறந்தவர்.

பேட்டிங் திருப்தி

பேட்டிங் திருப்தி

டோணியின் கேப்டன்ஷிப் சர்ச்சையாக இருந்தாலும் கூட அவர் பேட்டிங்கில் நிலையாகவ இருக்கிறார். டெஸ்ட் தொடரில் நான்கு அரை சதங்களை விளாசினார். மேலும் 2வது ஒரு நாள் போட்டியில் அரை சதம் எடுத்து அணிக்கு வெற்றியும் தேடித் தந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பு

இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பு

இங்கிலாந்துக்கு எதிராகவும் சிறப்பாக உள்ளார் டோணி. அதாவது கேப்டனாக மோதிய 24 போட்டிகளில் 16 வெற்றி, 5 தோல்வி என தெம்பாகவே உள்ளது டோணியின் ரெக்கார்ட் புக். இந்த புள்ளிவிவரத்தில் 2 டை மற்றும் ஒரு நோ ரிசல்ட்டும் உண்டு. வெற்றி சதவீதம் 73.91 ஆகும்.

விக்கெட் கீப்பராகவும் சாதனை

விக்கெட் கீப்பராகவும் சாதனை

மேலும் 3வது ஒரு நாள் போட்டியின்போது விக்கெட் கீப்பராகவும் ஒரு சாதனையைப் படைத்தார் டோணி. அதாவது 131 ஸ்டம்பிங்குகளை அப்போட்டியில் பூர்த்தி செய்தார் டோணி. இது புதிய சாதனைாகும். இதுவரை இலங்கையின் சங்கக்கராதான் 129 ஸ்டம்பிங்குகளுடன் முன்னணியில் இருந்தார். அவரை டோணி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

சங்கக்கராவை விட டோணியே பெஸ்ட்

சங்கக்கராவை விட டோணியே பெஸ்ட்

சங்கக்கரா தனது சாதனையைச் செய்ய 563 போட்டிகள் தேவைப்பட்டது. அதை டோணி 381 போட்டிகளில் முறியடித்துள்ளார்.

Story first published: Sunday, August 31, 2014, 14:24 [IST]
Other articles published on Aug 31, 2014
English summary
Despite recurrent controversies, Mahendra Singh Dhoni continued to shatter records on India's tour of England. After a poor Test series, India registered their second consecutive win, defeating England by six wickets at Trent Bridge, to take a 2-0 lead in the five-match series. Dhoni equaled Mohammad Azharuddin's record of 90 ODI wins, the most by an Indian captain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X