For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மன்னிச்சுருங்க.. கெஞ்சிய முன்னாள் வீரர்.. விடாமல் திட்டிய தோனி ரசிகர்கள்.. ஷாக் சம்பவம்!

டெல்லி : முன்னாள் இந்திய அணி வீரர் ஆகாஷ் சோப்ரா தோனி ரசிகர்களிடம் சிக்கிய சம்பவத்தை பற்றி கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

Recommended Video

Dhoni fans scolded Akash Chopra for not including him in T20 squad

அவர் டி20க்கான உத்தேச உலகக்கோப்பை அணியை சில வாரங்கள் முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அவரது உத்தேச அணியில் தோனிக்கு அவர் இடம் தரவில்லை. அதனால் தோனி ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.

நெருப்பு பேரோட... நீ கொடுத்த ஸ்டாரோட... தோனியின் கலக்கல் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கேநெருப்பு பேரோட... நீ கொடுத்த ஸ்டாரோட... தோனியின் கலக்கல் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே

ரசிகர்கள் திட்டினர்

ரசிகர்கள் திட்டினர்

கோபம் அடைந்த தோனி ரசிகர்கள் அவரை சமூக வலைதளத்தில் தொடர்ந்து திட்டியதாகவும், தன்னை மட்டுமல்லாமல் தன் குழந்தைகளையும் அவர்கள் திட்டியதாகவும் கூறி உள்ளார். தோனி ரசிகர்களால் தான் சில நாட்களுக்கு சமூக வலைதளத்தை விட்டே விலகி இருந்ததாகவும் கூறி உள்ளார்.

தோனி ரசிகர்கள்

தோனி ரசிகர்கள்

தோனிக்கு இருக்கும் தீவிர ரசிகர்கள் வேறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லை என்றே சொல்லலாம். இணையத்தில் தோனி ரசிகர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதனால், அவரைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

தோனி நிலை என்ன?

தோனி நிலை என்ன?

தோனி கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் ஆடவில்லை. அவராகவே விலகி இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் ஓராண்டான நிலையில் அவர் இந்திய அணியில் இனி நுழைய வாய்ப்பே இல்லை என ஒருபுறம் கூறப்படுகிறது.

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர்

எனினும், தோனி 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி தன் பார்மை நிரூபித்தால் இந்திய அணியில் இடம் பெறலாம் என கூறப்பட்டது. தோனி டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட ஆர்வமாக உள்ளதாகவும் ஒரு செய்தி வெளியானது.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

இது எல்லாம் உண்மைதான் என கூறுவது போல 2020 ஐபிஎல் தொடருக்காக தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் இதுவரை துவங்கவில்லை. இந்த நிலையில், அவரால் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற முடியாது என்ற நிலை உள்ளது.

அணியில் பெயர் இல்லை

அணியில் பெயர் இல்லை

இதை கருத்தில் கொண்டு தான் ஆகாஷ் சோப்ரா தான் அறிவித்த டி20 உலகக்கோப்பைக்கான உத்தேச இந்திய அணியில் தோனி பெயரை சேர்க்கவில்லை. ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பராக அறிவித்து இருந்தார். அதற்கு தான் தோனி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

மோசமாக திட்டினார்கள்

மோசமாக திட்டினார்கள்

இது பற்றி அஜித் அகர்கர் உடனான உரையாடலில் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டார். "நான் சில நாட்கள் சமூக வலைதளத்தை விட்டு விலகி இருக்க நேர்ந்தது. மக்கள் என்னை மோசமாக திட்டினார்கள். தொடர்ந்து திட்டினார்கள். என் குழந்தைகளை கூட திட்டினார்கள்" என்றார்.

மன்னித்து விடுங்கள்

மன்னித்து விடுங்கள்

"நான் என்னை மன்னித்து விடுங்கள்.. நடந்தது நடந்து விட்டது என அவர்களிடம் கூறினேன்." எனவும் குறிப்பிட்டார் ஆகாஷ் சோப்ரா. தோனி ரசிகர்களிடம் முன்னாள் வீரர் மன்னிப்பு கேட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

Story first published: Thursday, May 21, 2020, 9:49 [IST]
Other articles published on May 21, 2020
English summary
Dhoni fans abused Akash Chopra for not including him in T20 squad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X