For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவருக்கு சுரணையே இல்லை.. தோனியை கிண்டல் செய்த முன்னாள் வீரர்.. திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

Recommended Video

Dhoni fans trolls David Llyod | தோனியை கிண்டல் செய்த முன்னாள் வீரர்.. திட்டும் ரசிகர்கள்!- வீடியோ

மும்பை : தோனி இராணுவத்துடன் பயிற்சியில் ஈடுபடப் போவதை கிண்டல் செய்து, தோனி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஒருவர்.

தோனி அடுத்த இரண்டு மாத காலத்திற்கு இந்திய இராணுவத்தின் பாராஷூட் பிரிவுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டு இருந்தார்.

இதே காரணத்தால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாகவும் பிசிசிஐ-யிடம் தெரிவித்து இருந்தார்.

இரண்டு மாத ஓய்வு

இரண்டு மாத ஓய்வு

உலகக்கோப்பை தொடருக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளது இந்திய அணி. இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், தோனி அணியில் சேர்க்கப்பட மாட்டார் என கூறப்பட்டது. இந்த நிலையில், இராணுவத்தில் பயிற்சி செய்ய இருப்பதாகக் கூறி தோனி தாமாகவே தொடரில் இருந்து விலகினார்.

அனுமதி கிடைத்தது

அனுமதி கிடைத்தது

இதற்கிடையே, இராணுவத்திடம் இருந்து தோனிக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், தோனி பயிற்சி மட்டுமே செய்யலாம். எந்த இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்ற விதிமுறையுடன் தான் அவருக்கு அனுமதி கிடைத்தது.

டேவிட் லாயிட் கிண்டல்

டேவிட் லாயிட் கிண்டல்

இந்த நிலையில், தோனி இராணுவத்தில் பணிபுரிய உள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கவில்லை என்ற செய்திக்கு கீழே, இரண்டு சிரிக்கும் ஈமோஜிக்களை பதிவிட்டு கிண்டல் செய்து இருந்தார் முன்னாள் இங்கிலாந்து வீரரும், வர்ணனையாளருமான டேவிட் லாயிட்.

தோனி ரசிகர்கள் கோபம்

இதைக் கண்டு தோனி ரசிகர்கள் கோபமடைந்து உள்ளனர். அது எப்படி எங்கள் தல தோனியை, அதுவும் அவர் இராணுவத்தில் பணிபுரிய உள்ளேன் என கூறும் போது கிண்டல் செய்யலாம் என கோதாவில் குதித்துள்ளனர். "இது என்ன பயத்தால் சிரிப்பதா? கோழையே!" என லாயிட்டை திட்டி இருக்கிறார் ஒரு ரசிகர்.

அனுபவம் அதிகம்

9 டெஸ்ட் போட்டிகள், 8 ஒருநாள் போட்டிகள் vs. 90 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள். இந்த இங்கிலாந்து ஜாம்பவானுக்கு சுரணையே இல்லை போல..

மரியாதை கொடுங்க

மரியாதை கொடுக்க முடியவில்லை என்றால் விலகி இருங்கள். இங்கிலாந்து ஜாம்பவான் என கூறப்படும் இவருக்கு நல்ல வேலை இல்லையே என வருந்துகிறேன்.

Story first published: Monday, July 22, 2019, 19:10 [IST]
Other articles published on Jul 22, 2019
English summary
Dhoni fans got angry over David Lloyd’s simple tweet
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X