For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதை நீங்க செஞ்சே ஆகணும்.. கங்குலியின் கடைசி மேட்ச்.. அடம் பிடித்த தோனி.. நெகிழ்ச்சி சம்பவம்!

மும்பை : சௌரவ் கங்குலியின் கடைசி சர்வதேச போட்டியில் அவருக்கு கௌரவம் அளிக்கும் வகையில் அப்போதைய கேப்டன் தோனி ஒரு காரியம் செய்துள்ளார்.

Recommended Video

Dhoni gave captaincy to Ganguly on his last match

அது பற்றி பின்னர் கங்குலி தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். தோனி எதிர்பாராமல் தனக்கு அந்த கௌரவத்தை அளித்ததாகவும், தான் பல முறை மறுத்ததாகவும் கூறி உள்ளார்.

யாராவது இப்படி பண்ணுவாங்களா? தோனி பிறந்தநாளுக்காக.. பாண்டியா பிரதர்ஸ் செய்த காரியம்.. வெளியான உண்மை!யாராவது இப்படி பண்ணுவாங்களா? தோனி பிறந்தநாளுக்காக.. பாண்டியா பிரதர்ஸ் செய்த காரியம்.. வெளியான உண்மை!

கேப்டன் கங்குலி

கேப்டன் கங்குலி

கங்குலி என்றாலே அவர் பேட்ஸ்மேன் என்பதை விட கேப்டன் என்பதே அனைவருக்கும் நினைவில் வரும். அந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தும் கேப்டனாக வலம் வந்தார். இந்திய அணியை அடியோடு மாற்றிக் காட்டினார். அவர் 2008இல் ஓய்வு பெற்றார்.

கடைசி டெஸ்ட்

கடைசி டெஸ்ட்

2008இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. அந்த தொடருடன் கங்குலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார். அந்தப் போட்டியில் பேட்டிங்கிலும் அசத்தி இருந்தார் கங்குலி.

அரைசதம்

அரைசதம்

முதல் இன்னிங்க்ஸில் அரைசதம் அடித்து அசத்தினார். 153 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து இருந்தார். சச்சின் சதம் அடிக்க இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 441 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் கங்குலி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு 382 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது இந்திய அணி. ஆஸ்திரேலியா தோல்விக்கு அருகே சென்றது. அந்தப் போட்டியின் கடைசி பகுதியில் இந்திய வீரர்கள் அறையில் இருந்து வெளியே வரும் முன் இருபுறமும் நின்று கங்குலிக்கு வரவேற்பு அளித்தனர்.

தோனி என்ன சொன்னார்?

தோனி என்ன சொன்னார்?

அப்போது கேப்டன் தோனி கங்குலியை கேப்டன்சியை ஏற்குமாறு கூறினார். கடைசி நேரம் என்பதால் இந்திய அணியை கங்குலி வெற்றிக்கு அழைத்து செல்லும் வகையில் திட்டமிட்டார் தோனி. ஆனால், கங்குலி அதை முதலில் ஏற்கவில்லை.

அடம்பிடித்த தோனி

அடம்பிடித்த தோனி

ஆனாலும், தோனி இடைவிடாமல் கங்குலியை கேப்டன்சியை ஏற்குமாறு வற்புறுத்தினார். கடைசி விக்கெட் விழ இருந்த நிலையில் தோனி மீண்டுக் கேட்டுக் கொண்டதை அடுத்து கங்குலி கேப்டனாக செயல்பட ஒப்புக் கொண்டார். சில ஓவர்களுக்கு மட்டுமே அவர் கேப்டனாக இருந்தார்.

நினைவில் இல்லை

நினைவில் இல்லை

கங்குலி பந்துவீச்சு மாற்றம் மற்றும் பீல்டிங் மாற்றம் ஆகியவற்றை செய்தார். அது பற்றி ஒரு பேட்டியில் பேசிய கங்குலி, தான் அப்போது ஓய்வு பற்றி சிந்தித்து வந்ததால் தன்னால் போட்டியில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், தான் அப்போது என்ன செய்தேன் என நினைவில் இல்லை என்றும் கூறினார்.

விழாத கடைசி விக்கெட்

விழாத கடைசி விக்கெட்

கங்குலி கேப்டனாக செயல்பட்ட அந்த சில ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் கடைசி விக்கெட் விழவில்லை. பின்னர், கங்குலி, தோனியிடம் கேப்டன்சி உங்கள் வேலை எனக் கூறி ஒப்படைத்து விட்டார். இருவரும் சிரித்துக் கொண்டனர்.

ஓய்வு பெற்ற கங்குலி

ஓய்வு பெற்ற கங்குலி

அந்தப் போட்டியில் இந்தியா 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த டெஸ்ட் போட்டியுடன் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த கங்குலி ஓய்வு பெற்றார். 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள கங்குலி 7212 ரன்கள் குவித்துள்ளார்.

Story first published: Thursday, July 9, 2020, 21:09 [IST]
Other articles published on Jul 9, 2020
English summary
Dhoni gave captaincy to Ganguly on his last match as a farewell gesture.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X