அது பெரிய சதி.. தோனிக்கு பின் பெரிய கூட்டமே இருக்கிறது.. பகீர் புகார்களை அடுக்கும் யுவராஜ் தந்தை!

லண்டன்: தோனி மட்டும் தனி ஆளாக யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கவில்லை, அதற்கு பின் பலர் இருக்கிறார்கள் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியுள்ளார்.

யுவராஜ் சிங்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போக தோனிதான் காரணம் என்று பலர் கூறுவது உண்டு. முக்கியமாக யுவராஜ் சிங்கின் ரசிகர்கள் அதிகமாக இந்த புகாரை வைப்பது உண்டு.

ஆனால் சமீப காலமாக யுவராஜ் சிங்கின் தந்தையும் தோனியை அதிகமாக குற்றஞ்சாட்டி வருகிறார். யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தோனி மீது அடுக்கடுக்கான புகார்களை வைத்து வருகிறார்.

வயசு 60, 2 வருஷம் சர்வதேச அனுபவம்...! உங்ககிட்ட இருக்கா? அப்போ... நீங்க தான் இந்திய அணியின் கோச்

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் அளித்த பேட்டியில், தோனிதான் என் மகனின் வாழ்க்கையை வீணாக்கியது. யுவராஜுக்குத்தான் அணியில் கேப்டன் வாய்ப்பு இருந்தது. அதை தோனி தட்டிப்பறித்தார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக யுவராஜை அணியில் இருந்து நீக்கினார்.

ஏன்

ஏன்

அணியில் ஒரே மூத்த வீரராக தான் இருக்க வேண்டும் என்று தோனி திட்டமிட்டார். அதனால்தான் அவர் மூத்த வீரர்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்பினார். அதன்பின் கடைசியாக என்னுடைய மகனையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

பின்னணி

பின்னணி

தான் அணியில் மூத்த வீரனாக இருந்தால்தான் மற்ற வீரர்களை கட்டுப்படுத்த முடியும். கோலிக்கு ஆர்டர் போட முடியும் என்று தோனி நினைத்தார். ரவி சாஸ்திரி, எம் கே பிரசாத் போன்ற நபர்கள் அவருக்கு உடந்தையாக இருந்தார்கள். தோனிக்கு பின் பெரிய கூட்டமே இருந்தது. ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆன பின்தான் யுவராஜ் சிங் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரியை வைத்து அனில் கும்ப்ளேவை வீட்டிற்கு அனுப்பினார்கள். இது தோனிக்கு சாதகமாக முடிந்தது. தோனி ரவி சாஸ்திரியை வைத்துதான் இந்திய அணியை கட்டுப்படுத்தினார். பிசிசிஐ உடனடியாக இவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dhoni had huge support from Big hands says Yuvraj Singh father Yograj Singh.
Story first published: Wednesday, July 17, 2019, 13:09 [IST]
Other articles published on Jul 17, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X