தோனி இப்ப மட்டும் இல்லை... எப்போதுமே அவர் எங்களுக்கு வழிகாட்டி தான்...நெகிழ வைத்த விராட் கோலி

துபாய்: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சர்வதேச டி20 உலககோப்பை தொடர் ஆரம்பமாகி விட்டது. தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் 12 சுற்று ஆட்டங்களும் நடைபெற இருக்கிறது.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24-ம் தேதி சந்திக்கிறது. உலக கிரிக்கெட் ரசிகர்களே ஆர்வமுடன் இந்த பரபரப்பான போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

பண்ட் செய்த சிறிய தவறு.. ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றிய அந்த முடிவு.. டெல்லி அணி தோல்விக்கான காரணம் பண்ட் செய்த சிறிய தவறு.. ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றிய அந்த முடிவு.. டெல்லி அணி தோல்விக்கான காரணம்

 இந்தியாவின் நம்பிக்கை

இந்தியாவின் நம்பிக்கை

இந்திய அணியை பொறுத்தவரை 2007-ம் ஆண்டுக்கு பிறகு டி20 உலககோப்பையை கைப்பற்ற துடித்து வருகிறது.. அதற்கேற்ப ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், கேப்டன் விராட் கோலி என்ற அதிரடி சூரர்களும், பும்ரா, சமி, புவனேஷ்வர் போன்ற பந்துவீச்சு புயல்களும், ஷர்துல் தாக்கூர், பாண்ட்யா, ஜடேஜா போன்ற பெஸ்ட் ஆல்ரவுண்டர்களும் இந்தியா கோப்பையை வெல்ல நம்பிக்கையை கூட்டுகின்றனர்.

தோனி ஆலோசகர்

தோனி ஆலோசகர்

இது தவிர இந்தியா உலககோப்பையை வெல்லும் என்று ரசிகர்களுக்கு முழு நம்பிக்கையை கொடுத்து இருப்பது முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உலககோப்பை இந்திய அணிக்கு தோனி மென்டராக(ஆலோசகராக) நியமிக்கப்பட்டு இருப்பதுதான். இந்திய அணிக்காக 50 ஓவர் உலககோப்பை, டி20 உலககோப்பையை வாங்கி கொடுத்த தோனி அணியில் ஆலோசகராக இணைந்து இருப்பது வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுத்துள்ளது.

IPL 2022-விலும் Dhoni இருப்பார்.. உறுதி செய்த CSK நிர்வாகம்
வழிகாட்டியாக இருக்கிறார்

வழிகாட்டியாக இருக்கிறார்

இந்த நிலையில் தோனி எங்களுக்கு எப்போதும் வழிகாட்டியாக இருக்கிறார் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். ஐ.சி.சி ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் தோனி கூறியதாவது:- நாங்கள் எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கும்போது முதல், எங்களுடன் விளையாடும் நேரம் வரை தோனி எப்போதும் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். இப்போது அதே வேலையை மீண்டும் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நம்பிக்கையை அதிகரிக்கும்

நம்பிக்கையை அதிகரிக்கும்

இந்திய அணியில் விளையாடும் இளம் வீரர்கள் பலர் தோனி பல வருடங்களாக பெற்ற அனுபவத்தை அனுபவிக்க தயாராக இருக்கின்றனர். தோனியை மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவருடைய இருப்பு அணியில் மன உறுதியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நமக்கு ஏற்கனவே இருக்கும் நம்பிக்கையையும் அதிகரிக்கும். தோனி தன்னுடைய அறிவை, ஆலோசனையை ஒன்று அல்லது 2 சதவீதம் மட்டும் வெளிப்படுத்தினாலே அது அணியை எளிதாக வெற்றியை நோக்கி நகர்த்தும் என்று கேப்டன் விராட் கோலி கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
"Dhoni has always been our guide," said India captain Virat Kohli. he said that if Dhoni reveals only one or 2 per cent of his knowledge and advice, it will easily move the team towards victory
Story first published: Monday, October 18, 2021, 16:00 [IST]
Other articles published on Oct 18, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X