For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி தமது ஓய்வுக்கு நாள் குறித்துவிட்டார்...!! எங்களுக்கு தெரியும்..! பிசிசிஐ வெளியிட்ட பரபர தகவல்

மும்பை: உலக கோப்பை டி 20 கோப்பைக்கான சிறந்த இந்திய அணியை தயார் செய்த பிறகு தமது ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாக தோனி முன்னரே தெரிவித்து விட்டார் என்று பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி 20 தொடர் இந்திய அணியில் தோனி இல்லை. அவர் புறக்கணிக்கப்படுகிறார் என்று அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். வேண்டும் என்றே அணி நிர்வாகம் ஒதுக்கி வைப்பதாகவும், அவரது சாதனைகளை கொச்சைப்படுத்தும் விதமாக செயல்படுவதாகவும் கூறி வருகின்றனர்.

ஆனால் எதை பற்றியும் தோனி கவலைப்பட்டதாக தெரியவில்லை. ராணுவ பயிற்சிக்கு சென்றார். சிறப்பாக பயிற்சி மேற்கொண்டார். சொந்த ஊர் திரும்பினார். பிறகு சிஷ்யன் கேதர் ஜாதவுடன் தேசிய விளையாட்டு தினத்தில் அமெரிக்கா சென்றார்.

உச்சகட்டத்தை எட்டிய மோதல்.. கண்டமேனிக்கு திட்டிய கம்பீர்.. சர்ச்சை கருத்தை வைத்து சீண்டிய அப்ரிடி!உச்சகட்டத்தை எட்டிய மோதல்.. கண்டமேனிக்கு திட்டிய கம்பீர்.. சர்ச்சை கருத்தை வைத்து சீண்டிய அப்ரிடி!

தோனி அவகாசம்

தோனி அவகாசம்

அவர் எப்போது ஓய்வை அறிவிக்க போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை டி 20 அணிக்கான சிறந்த இந்திய அணியை தயார் செய்ய தோனி அணி தேர்வுக் குழுக்கு அவகாசம் அளித்துள்ளார் என்று பிசிசிஐ கூறியிருக்கிறது.

உறுதி செய்ய வேண்டும்

உறுதி செய்ய வேண்டும்

பிசிசிஐ தரப்பு மேலும் தெரிவித்து இருப்பதாவது: அந்த அவகாசத்துக்குள் இந்திய சிறந்த அணியை தேர்ந்தெடுத்துவிட்டால், ஓய்வை அவர் அறிவிப்பார். அதாவது, இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளதையும் அணியில் போதிய பலம் இருப்பதையும் உறுதி செய்து விட்டால், ஓய்வு குறித்து முடிவெடுப்பதாக தோனி கூறியுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

2 மாத ஓய்வு

2 மாத ஓய்வு

அவரை புறக்கணிக்கவே இல்லை. எதிர்கால அணியை தயார் செய்ய தோனி எங்களுக்கு அவகாசம் அளித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னால் அவர் 2 மாத கால ஓய்வு எடுத்துக் கொண்டார். அது இன்னமும் முடியவில்லை.

பெஸ்ட் பினிஷர்

பெஸ்ட் பினிஷர்

தோனியிடம் நாங்கள் இன்னும் அவரது எதிர்காலம் பற்றி பேசவில்லை. அதனால் தான் எதிர் கால அணி, திட்டம் போன்ற விஷயங்களில் கால அவகாசம் அளித்து உள்ளார். தோனியை போன்ற ஒரு பினிஷர் அணியில் யாரும் இல்லை என்று பிசிசிஐ கூறியிருக்கிறது.

Story first published: Saturday, August 31, 2019, 20:07 [IST]
Other articles published on Aug 31, 2019
English summary
Dhohi has given us time to plan the future and his retirement, BCCI sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X