For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணிக்கு இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது.. .

By Veera Kumar

ராஞ்சி: உலக கோப்பை வெல்ல முடியாத விரக்தி, யுவராஜ்சிங்கின் தந்தை வசைமாறி என மாறிமாறி காயப்பட்டுவரும், இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணி, அதையெல்லாம் சட்டை செய்யாமல், தனக்கு பிடித்தமான ஒரு விஷயத்தில் ஈடுபட்டுள்ளார்.

60 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருந்தாலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தோடு டிவிட்டருக்கு தற்காலிக பிரேக் விட்டார் கேப்டன் கூல், டோணி. இந்நிலையில், இன்றுதான் மீண்டும் டிவிட்டருக்கு வந்தார் டோணி.

Dhoni and his super bike

அதுவும், ஒரு புதிரோடுதான் ரீ-என்ட்ரி கொடுத்தார். பல மாத வெயிட்டிங்கிற்கு இப்போதுதான் முடிவு கிடைத்துள்ளது. இருந்தாலும், இன்னும் ரெண்டு மாதங்கள் இவளை அழைத்து கொண்டு செல்ல காத்திருக்க வேண்டும்.. அது என்ன சொல்லுங்கள் என்று ரசிகர்களிடம் கேள்வி கேட்டிருந்தார் டோணி.

பெரும்பாலானோர் டோணி தனது மகள் ஜிவாவை பற்றிதான் சொல்கிறார்போலும், ஐபிஎல்லுக்காக 2 மாதம் பிசியாக இருந்தபிறகு மீண்டும் குழந்தையுடன் கொஞ்சலாம் என்று கூறுகிறார் என்றுதான் நினைத்தனர்.

ஆனால், அவர் கொடுத்திருந்த லிங்கை கிளிக் செய்தபோது, அது டோணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கொண்டு சென்றது. அங்குதான் புதிருக்கு விடை இருந்தது. ஆம்.. டோணி ஆர்டர் செய்திருந்த பிராண்ட் நியூ, கவசாக்கி சூப்பர் பைக் அவரது வீட்டுக்கு வந்திறங்கியிருந்த படம்தான் அது. அந்த பைக்கைதான் அடுத்த இரு மாதங்களுக்கு பிறகு ரைடுக்கு எடுத்து செல்ல உள்ளதாக டோணி கூறியிருந்தது அப்போதுதான் பலருக்கும் தெரிந்தது.

டோணியிடம் ஏற்கனவே, ஆடி, லேண்ட்ரோவர் உள்ளிட்ட பல முன்னணி பிராண்டுகளின் கார்கள் மற்றும் சூப்பர் மாடல் பைக்குகள் உள்ளன. இருந்தாலும், பைக் பிரியரான டோணி, புதிதாக இந்த பைக்கை வாங்கி கொஞ்சிக் கொண்டுள்ளார்.

இதைத்தான் சொல்வார்கள் போல, ரண களத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்று..எது எப்படியோ, தல கூலாக இருந்தால், சிஎஸ்கே அணிக்கு கப்பு கேரண்டி என்ற சந்தோஷம் தமிழர்களுக்கு.. நீ கலக்கு தல..

Story first published: Wednesday, April 8, 2015, 14:41 [IST]
Other articles published on Apr 8, 2015
English summary
Finally the wait is over but another couple of months before I can take her on her first ride.guess the bike, tweets Dhoni.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X