பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.. பயிற்சி இல்லை.. தல மீது கோபத்தில் இருக்கும் சீனியர் தலைகள்!

சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2020 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு தோனியின் மோசமான பார்ம் முக்கியமான காரணமாக இருந்தது. தோனி எந்த போட்டியிலும் அரை சதம் அடிக்கவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை இப்ப தள்ளி வைச்சிருக்குது ஐசிசி.. என்ன காரணம்?

அதிலும் சில போட்டியில் மோசமாக ஆடி அவுட்டானார். கடைசியாக உலகக் கோப்பை செமி பைனல் போட்டியில் தோனி நியூஸிலாந்திற்கு எதிராக அவுட் ஆனதுதான் அவரின் கடைசி சர்வதேச போட்டி.

கொரோனா

கொரோனா

அதன்பின் கொரோனா காரணமாக தோனி ,கிரிக்கெட் போட்டிகள் எதிலும் ஆடவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் ஐபிஎல் போட்டிக்கும் தயார் ஆகவில்லை. அதன்பின் ஐபிஎல் போட்டியில் நேரடியாக ஒரே ஒரு வார பயிற்சிக்கு பின் வந்து களமிறங்கினார்.

சென்னை

சென்னை

இதனால் ஐபிஎல் போட்டியிலும் கடுமையாக திணறினார். பந்தை சரியாக கணிக்க முடியாமல், வேகமாக அடிக்க முடியாமல் திணறினார். இதனால் தோனி எப்படியாவது அடுத்த சீசனுக்குள் பயிற்சி மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிக்காக தயார் ஆக வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர்.

ஆடவில்லை

ஆடவில்லை

தோனி எப்படியும் இந்த வருடம் பயிற்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி இதுவரை கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளவில்லை. அதோடு இவர் ஜார்கண்ட் அணியுடன் சையது முஷ்டாக் கோப்பை போட்டியின் போது இணைந்து பயிற்சி மட்டும் மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

பயிற்சி இல்லை

பயிற்சி இல்லை

ஆனால் அதையும் தோனி செய்யவில்லை. ஐபிஎல் தொடரை அடுத்த சில மாதங்களில் வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க விவசாயம் மீது தோனி கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். கிரிக்கெட் மீது கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க விவசாயியாக தோனி களமிறங்கி உள்ளார்.

மோசமான நிலை

மோசமான நிலை

தோனியின் இந்த செயல் சிஎஸ்கே அணியில் பலருக்கு கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. தோனி இன்னும் கொஞ்சம் சீரியசாக இந்த தொடரை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர் பயிற்சி இல்லாமல் களத்தில் இறங்கலாம் என்று நினைக்க கூடாது.

 பயிற்சியை தொடங்க வேண்டும்

பயிற்சியை தொடங்க வேண்டும்

தொடருக்கு முன் பயிற்சியையே ஆரம்பிக்க வேண்டும். சிஎஸ்கே அணியில் முக்கிய வீரர்கள் இல்லை. இதனால் தோனி மீண்டும் பார்மிற்கு திரும்புவது அவசியம் என்று சில சிஎஸ்கே உறுப்பினர்கள் கருதுகிறார்கள். ஆனால் தோனி இதில் எதிலும் பெரிய அளவில் ஆர்வம் செலுத்தாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Out of Form Dhoni is not taking much practice for CSK ahead of IPL 2021.
Story first published: Monday, January 25, 2021, 18:21 [IST]
Other articles published on Jan 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X