For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலைவனுக்கு கை இரண்டுதான்.. ஆனால் "கப்"பு எத்தனை இருக்கு பாருங்க!

சென்னை: கேப்டன் என்றால் அது சாதாரண வார்த்தை.. கூல் கேப்டன் என்றால் அது தோனி மட்டுமே. அந்த அளவுக்கு படு கூலாக செயல்பட்டு அசத்திய தோனியின் சாதனைகளில் இது இன்னொன்று.

Recommended Video

Dhoni's Heartbreaking Run-Outs

கேப்டனாக இருந்தவர்களிலேயே அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்றவர் தோனி மட்டுமே. இந்த சாதனையை இனி யாராலும் முறியடிக்க முடியாது. காரணம், அதில் சில போட்டிகளை ஐசிசி இப்போது ரத்து செய்து விட்டது.

இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் இந்த விஷயத்தில் தோனியை அடிச்சுக்க எந்தக் கேப்டனும் கிடையாது என்பது தோனிக்கு பெருமை தரக் கூடியதாகும்.

"தலைவா".. ஒரு நாள் போட்டிகளில் அதிக நாட் அவுட்.. தோனிதான் லீடிங்!

தோனியின் முதல் கோப்பை

தோனியின் முதல் கோப்பை

தோனி கேப்டனாக இருந்தபோது முதல் முறையாக 2007ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பைப் போட்டியைச் சந்தித்தார். ரெகுலர் கேப்டனாக அப்போது இருந்த டிராவிட்டுக்குப் பதில் சீனியர்களே இல்லாமல் முற்றிலும் இளைஞர்களைக் கொண்ட அணியை தோனி தலைமையில் இந்தியா அனுப்பியது. நம்பிக்கையை சீர்குலைக்காமல் அப்படியே கோப்பையை தட்டி வந்தது தோனி அணி. இது ஒரு சாதனையாகும்.

2011ல் புதிய வரலாறு

2011ல் புதிய வரலாறு

அடுத்து வந்தது இமாலய சாதனை. அதாவது 2011ம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டி. இந்த தொடரை இந்தியா, இலங்கை வங்கதேசம் ஆகியவை இணைந்து நடத்தின. மும்பையில் இறுதிப் போட்டி நடந்தது. இப்போட்டியில் கம்பீரும், தோனியும் பிரித்து மேய்ந்து விட்டனர். தோனியின் அபார ஆட்டத்தாலும் கேப்டன்ஷிப்பாலும் போட்டியை வென்றது இந்தியா. இது இந்தியாவுக்குக் கிடைத்த 2வது ஒரு நாள் உலகக் கோப்பையாகும்.

ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை

அதேபோல 2010 மற்றும் 2016 ஆகிய இரு ஆண்டுகளில் நடந்த ஆசியா கோப்பைப் போட்டிகளை இந்தியா வென்று கோப்பையைத் தட்டி வந்தது. இது ஒரு சாதனையாகும். இன்னொரு சாதனை 2013ல் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி. இதையும் தோனி அணியே வென்று சாதனை படைத்தது. இப்போது இந்த போட்டித் தொடரை ரத்து செய்து விட்டது ஐசிசி.

3 முறை ஐபிஎல் சாம்பியன்

3 முறை ஐபிஎல் சாம்பியன்

இது மட்டுமா.. ஐபிஎல்லில் புதிய வரலாறு படைத்தவர் தோனி. இவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அசைக்க முடியாத அணியாக உள்ளது. ஐபிஎல் தொடரை 3 முறை வென்றவர் கேப்டன் தோனி. மேலும் பல சாதனைகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வைத்துள்ளது. இன்று மும்பை அணி போட்டிக்கு வந்து விட்டாலும் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து வலுவுடன் உள்ளதே தோனியின் சிறப்புக்கு சான்றாகும்.

Story first published: Tuesday, July 7, 2020, 14:59 [IST]
Other articles published on Jul 7, 2020
English summary
MS Dhoni is the only captain to win all ICC trophies
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X