For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"தலைவா".. ஒரு நாள் போட்டிகளில் அதிக நாட் அவுட்.. தோனிதான் லீடிங்!

சென்னை: தலைவா என்று சும்மாவா சொன்னார்கள். ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை நாட் அவுட்டாக இருந்த சாதனை முன்னாள் கேப்டன் தோனியிடம்தான் உள்ளது.

Recommended Video

Dhoni Birthday 2020 | Happy Birthday Dhoni

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படும் தோனிக்கு இன்று பிறந்த நாள். ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாகவே பட்டையைக் கிளப்ப ஆரம்பித்து விட்டனர். எங்கெங்கும் கொண்டாட்டம்தான்.

கொரோனா காரணமாக சமூக வலைதளங்களில் கொண்டாட்டம் களை கட்டி விட்டது. தோனி ரொம்ப நாளாக ஆடாமல் இருப்பதால் ரசிகர்கள் காய்ந்து போய்க் கிடக்கிறார்கள்.

வயசு 39.. இன்னும் தளராத அதிரடி.. தல தோனியின் ஃபென்டாஸ்டிக் 5! வயசு 39.. இன்னும் தளராத அதிரடி.. தல தோனியின் ஃபென்டாஸ்டிக் 5!

முக்கிய கோப்பைகள்

முக்கிய கோப்பைகள்

தோனிக்கு இன்று 39 வயது பிறக்கிறது. இந்தியா கண்ட சிறப்பான கேப்டன்களில் தோனிக்கு தனி இடம் உண்டு. அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனிதான். ஒரு நாள் உலகக் கோப்பையை இந்தியா 2வது முறை வெல்ல தோனியே முக்கியக் காரணம். அதேபோல இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றதும் தோனி தலைமையில்தான்.

சிறப்பான கேப்டன்

சிறப்பான கேப்டன்

பல திறமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பெருமையும் தோனிக்கே உண்டு. ஆணித்தரமான முடிவுகளை அலட்டிக்காமல் எடுப்பதில் தோனிக்கு நிகர் தோனிதான். அஸாருதீன், கங்குலிக்குப் பிறகு இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் தோனி மட்டுமே. தோனி பதித்துச் சென்ற முத்திரைகளும், சாதனைகளும் இன்னும் அப்படியேதான் உள்ளன. விராட் கோலி அவரது இடத்திற்கு வந்தாலும் கூட தோனிதான் இன்னும் விஸ்வரூபமாக ரசிகர்களுக்குத் தெரிகிறார்.

நாட் அவுட் சாதனை

நாட் அவுட் சாதனை

தோனியின் சாதனைகள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் இது. அதாவது ஒரு நாள் போட்டிகளில் அதிக போட்டிகளில் நாட் அவுட் சாதனையை தோனிதான் வைத்துள்ளார். 350 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள தோனி அதில் 84 முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தென்னாப்பிரிக்க வீரர் ஷான் போலாக். அவர் 72 போட்டிகளில் நாட் அவுட் ஆகாமல் இருந்தார். 3வது இடத்தில் இருப்பவர் இலங்கையின் சமிந்த வாஸ். இவர் 72 போட்டிகளில் நாட் அவுட்.

உண்மையான தலைவன்

உண்மையான தலைவன்

தோனியின் இந்த சாதனை பாராட்டுக்குரியது. வழக்கமாக இந்தியாவின் சிறந்த பினிஷராக இருப்பவர் தோனிதான். அதில் பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்துள்ளது. பல அதிரடி முயற்சிகளை வெளிப்படுத்தியது. கடைசி வரை விடாமல் போராடக் கூடியவர் தோனி. வெற்றிக்கான வாய்ப்பே இல்லை என்று இருந்தாலும் கூட கடைசி பந்து வரை விடாமல் பேட் செய்பவர் தோனி என்பதுதான் அவரது ஸ்பெஷாலிட்டியே. இப்போது சொல்லுங்க தலைவன்னு சொல்வது தோனிக்கு எத்தனை பொருத்தம்.

Story first published: Tuesday, July 7, 2020, 15:00 [IST]
Other articles published on Jul 7, 2020
English summary
Former captain Dhoni is leading the most not out players table in ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X