For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த விஷயத்தில் இவர் மட்டும் தான் பெஸ்ட்.. இரண்டு அணிக்கும் தோனி தான் கேப்டன்.. எங்கே தெரியுமா?

Recommended Video

Kumble says Dhoni can return into Indian team

மும்பை : பிரபல கிரிக்கெட் இணையதளமான கிரிக்இன்போ (CricInfo) கடந்த பத்தாண்டுகளில் சிறந்த 11 வீரர்கள் அடங்கிய டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளை அறிவித்துள்ளது.

இதில் ஒருநாள் மற்றும் டி20 அணியில் தோனியை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக அறிவித்துள்ளது. விராட் கோலி டெஸ்ட் அணிக்கு மட்டுமே கேப்டனாக இடம் பெற்றுள்ளார்.

சிறந்த அணி

சிறந்த அணி

2010 முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்கள் அடங்கிய அணியை பல்வேறு கிரிக்கெட் சார்ந்த அமைப்புகள், முன்னாள் வீரர்கள் மற்றும் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

தோனி இல்லை

தோனி இல்லை

அதில் பலரும் தோனியை ஒருநாள் மற்றும் டி20 அணியில் சேர்க்கவில்லை. சிலர் மட்டுமே அவரை விக்கெட் கீப்பராக மட்டும் அணியில் சேர்த்தனர். மேலும், தோனியை கேப்டனாக பலரும் தேர்வு செய்யவில்லை.

ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

இந்த நிலையில், கிரிக்கெட் ஊடகங்களில் முக்கியமானதாக கருதப்படும் கிரிக்இன்போ, ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு தோனியை கேப்டனாக தேர்வு செய்து இருப்பது தோனி ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

மோசமான காலம்

மோசமான காலம்

தோனி கடந்த பத்தாண்டுகளில் பேட்டிங்கில் ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். 2018ஆம் ஆண்டு அவருக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. மேலும், கடந்த இரு ஆண்டுகளாக அவரது ஸ்ட்ரைக் ரேட் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

தேர்வு செய்யவில்லை

தேர்வு செய்யவில்லை

இந்த காரணங்களால் அவரை பலரும் பத்தாண்டு அணியில் தேர்வு செய்யவில்லை. அவரது விக்கெட் கீப்பிங் மற்றும் 2010 முதல் 2017 வரையிலான ஆட்டங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

தேர்வு செய்ய காரணம்

தேர்வு செய்ய காரணம்

எனினும், 23 நபர்கள் கொண்ட குழு தோனியை ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக தேர்வு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், தோனியின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் சராசரி.

சிறப்பான கீப்பிங்

சிறப்பான கீப்பிங்

கடந்த பத்தாண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் தோனியின் பேட்டிங் சராசரி 50.35 ஆகும். இதே காலகட்டத்தில் அவர் 170 கேட்ச்கள் மற்றும் 72 ஸ்டம்பிங் செய்துள்ளார். டி20 போட்டிகளில் அவரது விக்கெட் கீப்பிங் மற்றும் சிறந்த மிடில் ஆர்டர் வீரர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய வெற்றிகள்

முக்கிய வெற்றிகள்

கேப்டன்சியில் சிறந்த நுட்பங்களை கொண்டவர் என்ற அடிப்படையில் தோனியை ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு கேப்டனாக தேர்வு செய்துள்ளனர். இதே காலகட்டத்தில் தான் இந்தியா 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களை தோனி தலைமையில் வென்றது.

விராட் கோலி தேர்வு

விராட் கோலி தேர்வு

டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 என மூன்று அணிகளிலும் இடம் பெற்று உள்ளார் விராட் கோலி. இதில் டெஸ்ட் அணிக்கு மட்டுமே அவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மற்ற இந்திய வீரர்கள்

மற்ற இந்திய வீரர்கள்

தோனி, கோலி தவிர இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் - அஸ்வின் - டெஸ்ட் அணி. ரோஹித் சர்மா - ஒருநாள் அணி. பும்ரா - டி20 அணி. மற்ற இந்திய வீரர்கள் யாருக்கும் சிறந்த வீரர்கள் கொண்ட அணிகளில் இடம் கிடைக்கவில்லை.

Story first published: Wednesday, January 1, 2020, 14:41 [IST]
Other articles published on Jan 1, 2020
English summary
Dhoni named as captain of the ODI and T20 teams of the last decade.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X