For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐயோ அவரா?.. என் கேப்டன்சிக்கே ஆபத்து வரும்.. கறாராக சொல்லிவிட்ட தோனி.. முட்டிமோதும் சிஎஸ்கே!

சென்னை: சிஎஸ்கே அணியில் ஸ்மித்தை கொண்டு வருவதற்கு கேப்டன் தோனி பெரிய அளவில் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

2021 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி தீவிரமாக தயாராகி வருகிறது. ராபின் உத்தப்பா போன்ற மூத்த வீரர்களை சிஎஸ்கே அணி மீண்டும் ஏலம் எடுக்க தொடங்கி உள்ளது.

வரும் பிப்ரவரி 17-18 தேதிகளில் சென்னையில் ஐபிஎல் ஏலம் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் சென்னை அணி யாருக்கு எல்லாம் குறி வைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐயோ சிஎஸ்கேவா? வேண்டவே வேண்டாம்.. தெறிச்சு ஓடும் இளம் வீரர்கள்.. பரபரப்பும் ஐபிஎல் 2021 ஏலம்! ஐயோ சிஎஸ்கேவா? வேண்டவே வேண்டாம்.. தெறிச்சு ஓடும் இளம் வீரர்கள்.. பரபரப்பும் ஐபிஎல் 2021 ஏலம்!

சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் ஸ்மித்தை கொண்டு வருவதற்கு கேப்டன் தோனி பெரிய அளவில் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறுகிறார்கள். ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஸ்மித் தற்போது அந்த அணியால் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளார். இந்த சீசனில் அவர் எந்த அணிக்கு செல்வார் என்று தெரியவில்லை .

தெரியவில்லை

தெரியவில்லை

ஸ்மித்தை சிஎஸ்கே அணியில் ஏலம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் இவர் களமிறங்கினால் அது அணிக்கு உறுதுணையாக இருக்கும். சிஎஸ்கே அணிக்காக இவரை ஓப்பனிங் கூட இறங்க சொல்லலாம் என்றும் சிஎஸ்கே அணிக்கு பலர் அறிவுரை வழங்கி வருகிறாரகள்.

அறிவுரை

அறிவுரை

ஆனால் ஸ்மித் மீது தோனி பெரிய ஆர்வம் காட்டவில்லை. ஸ்மித் எப்போதும் சிறப்பாக ஆட கூடிய டி 20 வீரர் இல்லை. எப்போதாவது அதிரடி காட்டுவார். கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியில் இவர் சிறப்பாக ஆடவில்லை.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு ஸ்மித் காரணமாக இருந்தார். அதோடு புனே அணியில் ஸ்மித் உடன் தோனி சேர்ந்து ஆடி உள்ளார். புனே நிர்வாகத்தின் அழுத்தத்தால் தனது கேப்டன்சியை தோனி ஸ்மித்திடம் கொடுத்தது கூட நடந்தது. இதனால் ஸ்மித் உடன் தோனிக்கு கொஞ்சம் கசப்பான அனுபவம் உள்ளது.

சிக்கல்

சிக்கல்

இதனால் ஸ்மித் அணிக்கு வந்தால் அது தோனிக்கு பிரச்சனை ஆகலாம். ஏன் சமயங்களில் தோனியின் கேப்டன்சிக்கு கூட ஸ்மித்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஸ்மித் வருவதை தோனி விரும்பவில்லை.

ஆனால் சிஎஸ்கே

ஆனால் சிஎஸ்கே

ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஸ்மித் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறது. ஸ்மித் வந்தால் அது அணிக்குத்தான் பலம். ரெய்னாவிற்கு பின் இவரை ஆட வைக்கலாம் என்று சிஎஸ்கே கருதுகிறது. இதனால் ஏலத்தின் போது சிஎஸ்கே என்ன முடிவு எடுக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Thursday, January 28, 2021, 10:49 [IST]
Other articles published on Jan 28, 2021
English summary
Dhoni not so interested in taking Smith to CSK in IPL 2021 Mini Auction.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X