For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆக.15க்கு பிறகு தோனியின் நெக்ஸ்ட் பிளான் இதுதான்..!! இளைஞர்களுக்கு லக்கி சர்ப்ரைஸ்..!!

Recommended Video

Dhoni Next Plan | ஆக.15க்கு பிறகு தோனியின் அடுத்த திட்டம் இதுதான்..!!- வீடியோ

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்க தோனி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தோனி ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்பதை தாண்டி களத்தில் ரொம்ப அமைதியானவர். காரியத்தை கச்சிதமாக முடிப்பதில் வல்லவர். சாந்த சொரூபி என சொல்வது உண்டு.

அவரின் ரசிகர்கள் பட்டாளம் உலகம் முழுக்க இந்த குணாதிசயங்களே கூட ஒரு காரணமாக இருக்கின்றன. ராணுவத்தில் அவருக்குக் கவுரவ லெப்டினென்ட் கர்னல் பதவி அளிக்கப்பட்டது.

ராணுவத்தில் தோனி

ராணுவத்தில் தோனி

அதன் பிறகு, கவுரவ பதவிகள் வழங்கப்படும் மற்ற பிரபலங்களைப் போல அவர் செயல்படவில்லை. ஒரு ராணுவ வீரன் எடுக்கும் பயிற்சிகளை தானும் மேற் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதன்படி தற்போது, ராணுவ முகாமில் தங்கி பயிற்சி எடுத்து வருகிறார் தோனி.

தாமதமான ஆசை

தாமதமான ஆசை

அதற்கு காரணம் தோனிக்கு சிறிய வயதில் ராணுவ அதிகாரியாக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது தாமதமாக நடந்திருந்தாலும் அதைப் பயன்படுத்தி கொண்டுள்ளார்.

ஆக.15ல் முடிகிறது

ஆக.15ல் முடிகிறது

இதையடுத்து அவர், ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற்றார். பின்னர் விக்டர் படையுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். வரும் 15ம் தேதி வரை அவர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளார்.

விக்கெட் கீப்பர்

விக்கெட் கீப்பர்

அதனால் 2 மாத விடுப்பில் அங்கு சென்று பயிற்சி பெற்று வருவதால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் இடம்பெறவில்லை. தோனிக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார்.

கிரிக்கெட் அகாடமி

கிரிக்கெட் அகாடமி

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்க தோனி முடிவு செய்து அதற்காக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள இளைஞர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் இலவசமாக பயிற்சி அளிப்பது தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் தோனி பேசி வருவதாக தெரிகிறது.

அரசின் வாக்குறுதிகள்?

அரசின் வாக்குறுதிகள்?

அவரது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் அரசும் சில நம்பிக்கையான வாக்குறுதிகளை அளித்துள்ளதாகவும் தெரிகிறது. ஒருவேளை அந்த அகாடமி தொடங்கப்பட்டால், ஜம்முகாஷ்மீர் பகுதியில் இருந்து திறமையான இளைஞர்கள் இந்திய அணிக்கு கிடைப்பார்கள் என நம்பலாம்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

இளைஞர்களுக்கு வாய்ப்பு

மிகவும் பின்தங்கிய வளர்ச்சி பெறாத ராஞ்சியில் இருந்து ஒரு தோனி கிடைத்தது போன்று, ஜம்மு காஷ்மீரில் இருந்தும் தோனி போல பலர் கிடைப்பார்கள் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆக, மொத்தத்தில் இளைஞர் படை தல தோனியின் கிரிக்கெட் அகாடமியில் சேர வாய்ப்பு உருவாக போகிறது என்று சொல்லலாம்.

Story first published: Monday, August 12, 2019, 13:17 [IST]
Other articles published on Aug 12, 2019
English summary
Dhoni plans to open a cricket academy in jammu Kashmir very soon, sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X