For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரன் அவுட்டன்னா இப்படி தான் இருக்கணும்… நிரூபித்த தல தோனி… அதிர்ந்த மேக்ஸ்வெல் - வைரல் வீடியோ

ராஞ்சி:ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் மேக்ஸ்வெல்லை தோனி ரன் செய்த விதம் கண்டு கிரிக்கெட் உலகமே வியந்து போயுள்ளது. அது தொடர்பான வீடியோவும் வைரலாகி உள்ளது.

தோனியின் சொந்த ஊரில் இப்படிப்பட்ட விக்கெட்டை வீழ்த்தியது மற்றொரு பிளஸ். பீல்டிங்கில் ஒரு வீரர் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும்... அவருக்கு உறுதுணையாக விக்கெட் கீப்பர் இருக்க வேண்டும்.

இந்த செயல்பாடு எல்லா மேட்சுகளிலும் நாம் பார்க்க முடியாது. பீல்டிங்கில் இருந்து வீரர் த்ரோ செய்யும் பந்தை கோட்டை விடும் விக்கெட் கீப்பர்களும் உண்டு. பந்தை சரியாக பிடித்தும் விக்கெட்டில் அடிக்காத விக்கெட் வீரரும் உண்டு.

தோனி, கங்குலியை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை! தோனி, கங்குலியை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை! "ரன் மெஷின்" என மீண்டும் நிரூபித்த கேப்டன் கோலி!

விக்கெட் கீப்பிங்

விக்கெட் கீப்பிங்

ஆனால்... ராஞ்சியில் நடைபெற்றதே ஒரு சுவாரஸ்யம். ஒரு விக்கெட் கீப்பிங் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராஞ்சியில் ஆஸ்திரேலியா, இந்தியா மேட்சை கூறலாம்.

இந்தியா பீல்டிங்

இந்தியா பீல்டிங்

அந்த போட்டியில் இந்திய அணி முதலில் பீல்டிங் செய்தது. கட்டாய வெற்றி என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்கிறது. தொடக்க வீரர்களான கேப்டன் பின்ச்சும். கவாஜாவும் அற்புதமான தொடக்கத்தை தந்தனர்.

பின்ச் அபாரம்

பின்ச் அபாரம்

இந்திய அணியின் பந்துவீச்சு அவர்களிடம் எடுபடவே இல்லை. மாறாக பின்ச் மீண்டும் பார்முக்கு வந்துவிட்டார். ஒரு வழியாக அந்த ஜோடி பிரிந்தது.

கட்டுப்படுத்தும் நடவடிக்கை

கட்டுப்படுத்தும் நடவடிக்கை

அதன் பின்னர் இந்திய அணி ஆஸியை கட்டுப்படுத்த முயற்சித்தது. 41.6வது ஓவர். பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் நிற்கிறார்.

புரட்டி எடுத்த மேக்ஸ்வெல்

புரட்டி எடுத்த மேக்ஸ்வெல்

மற்றொரு முனையிலோ அதிரடி வீரர் மேக்ஸ்வெல். 31 பந்துகளில் 47 ரன்கள் அடித்து, இந்திய பவுலர்களை புரட்டி எடுத்திருந்தார்.

மேக்ஸ்வெல் ஓடுகிறார்

மேக்ஸ்வெல் ஓடுகிறார்

சைனாமேன் குல்தீப் யாதவ் பந்தை வீசுகிறார். அழகாக அந்த பந்தை எதிர்கொண்ட மார்ஷ் ரன் எடுக்க ஓடுகிறார். எதிர்முனையில் நின்றிருந்த மேக்ஸ்வெல்லும் ரன்னிங் கொடுக்கிறார்.

சூப்பர் ஜடேஜா

சூப்பர் ஜடேஜா

பந்து பவுண்டரி பக்கமாக தான் செல்கிறது என்று எல்லோரும் நினைத்திருக்க, சர்க்கிளில் நின்றிருந்த பந்து ஜடேஜா கையில் பந்து சிக்கியது. அவர் சற்றும் யோசிக்கவோ, தாமதிக்கவோ இல்லை.

வாவ்…. ரன்அவுட்

வாவ்…. ரன்அவுட்

அசுர வேகத்தில் கையில் வைத்திருந்த பந்தை தோனியை நோக்கி வீசினார். மேக்ஸ்வெல் கிரீஸை நெருங்க நொடிக்கும் குறைவான நேரமே இருக்க பந்தை அப்படியே, கைகளால் ஸ்டம்ப்பை நோக்கி திருப்பிவிட்டார் தோனி. அதே வேகத்தில் பந்து ஸ்டம்ப்பை முத்தமிட... மேக்ஸ்வெல் ரன் அவுட்டாகிறார்.

அரங்கமே கொண்டாட்டம்

மேக்ஸ்வெல் அவுட்டா இல்லையா என்று 3வது நடுவரிடம் அப்பீல் போகிறது. ஸ்கீரினில் அவுட் என்று பளபளக்க அரங்கமே அதிர்கிறது. ஆனால், தல தோனியோ அதை பெரிதாக கொண்டாடவில்லை.

குவியும் பாராட்டுகள்

குவியும் பாராட்டுகள்

ஆனால்.. ஒட்டுமொத்த அரங்கமும் கரவொலி எழுப்பி கொண்டாடியது. அதேசமயம், ஜடேஜாவுக்கும் பாராட்டுகள் கிடைத்தன.

மேக்ஸ்வெல் ஆவேசம்

மேக்ஸ்வெல் ஆவேசம்

பந்து எங்கிருந்து வந்தது... எப்படி அவுட்டானேன் என்று தெரியாமல் ஒரு கணம் மேக்ஸ்வெல் திகைத்து தான் போயிருந்தார். அதன்பின்னர்... மனம் வெறுத்த அவர் பெவிலியன் திரும்பியவுடன் ஆவேசமாக கிளவுசை கழட்டி வீசினார். சக வீரர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

நொடிக்கும் குறைவான வேகத்தில் தல தோனியின் இந்த ரன் அவுட் தான் இப்போ இணையத்தில் வைரல். சொந்த ஊரில் அவர் நிகழ்த்திய மாயாஜால ரன் அவுட்டுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Story first published: Friday, March 8, 2019, 21:26 [IST]
Other articles published on Mar 8, 2019
English summary
Dhoni, Ravindra Jadeja pull off sensational run out in Ranchi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X