For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித் பவர்ப்ளே ஓவர்ல வீசுன்னாரு.. நான் புரியாம முழிச்சேன்.. தோனி தான் உதவினார்

மும்பை : தோனியின் அனுபவம் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எப்படி உதவுகிறது என்பதை பலமுறை நாம் பார்த்து இருக்கிறோம்.

தோனி விக்கெட் கீப்பராக மட்டுமில்லாமல் களத்தில் மற்ற இந்திய வீரர்களுக்கு ஒரு ஆலோசகராகவும் இருக்கிறார்.

அப்படி தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தையும், தோனி எப்படி பந்துவீச்சாளர்களுக்கு உதவுகிறார் என்பதையும் கூறி இருக்கிறார் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாஹல்.

தோனியின் கவனிக்கும் ஆற்றல்

தோனியின் கவனிக்கும் ஆற்றல்

"தோனிக்கு அற்புதமான கவனிக்கும் ஆற்றல் உள்ளது. பந்துவீச்சாளரின் உடல் மொழியை ஸ்டம்ப்களுக்கு பின்னே இருந்தே புரிந்து கொள்வார். ஒரு பந்துவீச்சாளருக்கு சந்தேகமோ, கேள்விகளோ இருக்கிறது என்பதை அதை வைத்தே புரிந்து கொள்வார். எனக்கு எப்போது சந்தேகம் இருந்தாலும் அவரே வந்து அதை தீர்த்து வைப்பார்" என சாஹல் கூறினார்.

பலருக்கு உதவியவர் தோனி

பலருக்கு உதவியவர் தோனி

"எனக்கு மட்டுமில்லை. என்னைப் போல பல பந்துவீச்சாளர்களுக்கு அவர் உதவி இருக்கிறார்" என மகிழ்ச்சியோடு கூறுகிறார் சாஹல். குறிப்பாக, சமீப காலத்தில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் இருவருக்கும் தோனி அதிகம் உதவி இருக்கிறார்.

யோசனை சொன்ன தோனி

யோசனை சொன்ன தோனி

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் நடந்த நிகழ்வு பற்றி கூறினார் சாஹல். "அந்த போட்டியின் போது, கேப்டன் ரோஹித், தோனியிடம் பேசி விட்டு பவர்ப்ளே ஓவரில் என்னை பந்து வீச அழைத்தார். நான் தோனியை பார்த்தேன். அவர் என்னை நோக்கி ஓடி வந்தார், ஸ்டம்ப்பில் இருந்து ஸ்டம்புக்கு பந்துவீசுமாறு கூறினார். நான் அதே போல வீசி இமாம் விக்கெட்டை வீழ்த்தினேன்" என கூறினார் சாஹல்.

சில சமயம் திட்டும் உண்டு

சில சமயம் திட்டும் உண்டு

"அதே சமயம் நாங்கள் தவறு செய்தால் தோனி எங்களை திட்டுவார்" எனவும் கூறி சிரித்தார் சாஹல். குல்தீப் யாதவ் பல முறை இப்படி தோனியிடம் செல்ல திட்டுக்கள் வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 17, 2020, 21:10 [IST]
Other articles published on Apr 17, 2020
English summary
Dhoni reads Bowlers body language from behind the stumps says Chahal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X